TREND

கனடாவில் வெயிட்டர் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் - வைரல் வீடியோ

கனடாவில் உள்ள தந்தூரி ஃப்ளேம் என்ற உணவகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேலைக்கான நேர்காணலுக்காக வரிசையில் காத்திருப்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வைரல் வீடியோவில் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வெயிட்டர் வேலைக்காக வரிசையாக நிற்பதை பார்க்க முடிகிறது. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. கனடாவில் வேலை தேடும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை சித்தரிக்கும் வீடியோ என்ற தலைப்பில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அக்டோபர் 3 அன்று @MeghUpdates என்ற யூசர் தனது X பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் “கனடாவிலிருந்து 3000 மாணவர்கள் (பெரும்பாலும் இந்தியர்கள்) ப்ராம்ப்டனில் ஒரு புதிய உணவகம் ஒன்றில் வெயிட்டர் & சர்வன்ட் வேலைக்காக வரிசையில் நிற்கும் காட்சி என குறிப்பிட்டுள்ளார். Scary scenes from Canada as 3000 students (mostly Indian) line up for waiter & servant job after an advertisement by a new restaurant opening in Brampton. Massive unemployment in Trudeau's Canada? Students leaving India for Canada with rosy dreams need serious introspection! pic.twitter.com/fd7Sm3jlfI மேலும் அந்த வீடியோவில் பேசிய வரிசையில் காத்திருந்த அகம்வீர் சிங் என்ற மாணவர், “நான் பிற்பகலில் வந்தேன்” நீண்ட வரிசையில் வேலைக்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். மற்றொரு மாணவரோ, “நான் ஆன்லைனில் விண்ணப்பித்தேன், நேர்காணல் நடக்கும் என நினைத்து இங்கு வந்தேன் ஆனால் எதுவும் நடக்கவில்லை. பெரும்பாலானோர் நீண்ட நேரமாக இங்கு தான் நிற்கிறார்கள். வேலைக்கான வாய்ப்பு இங்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள யூசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கமென்ட் செய்துள்ள யூசர் ஒருவர், “பல்வேறு கனவுகளுடன் இந்தியாவை விட்டு கனடா செல்லும் மாணவர்கள் அங்குள்ள சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “பிரம்டனில் வெயிட்டர் மற்றும் சர்வன்ட் வேலைகளுக்காக 3,000 மாணவர்கள், முக்கியமாக இந்தியர்கள் வரிசையில் காத்திருப்பது கவலையளிக்கிறது” என வருத்தம் தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: 7 அடி 1 அங்குல உயரம்.. 63 அங்குல அகல மார்பு.. WWE-ல் அண்டர்டேக்கரை 10 நிமிடங்களில் தோற்கடித்த அந்த வீரர்.. யார் தெரியுமா..? மற்றொருவர் செய்துள்ள கமென்டில் “பிரச்சனை என்னவென்றால், அவர்கள் அங்கு எந்த வேலையையும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் அதே வேலையை இந்தியாவில் செய்ய வெட்கப்படுவார்கள். நிச்சயமாக, இந்தியாவை விட கனடாவில் வேலைவாய்ப்பு நிலை மிகவும் சிறப்பாக உள்ளது” என தெரிவித்துள்ளார். “கனடா வேலையின்மையை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் கூட புதிய உணவகங்களில் வேலைக்காக இந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் வரிசையில் நிற்பதை நான் பார்த்ததில்லை” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சிலரோ இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும் கமென்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர் “ஒரு உணவகத்தில் பகுதிநேரமாக வேலை செய்வது பல சர்வதேச மாணவர்களுக்கு பொதுவான நடைமுறையாகும்” என யதார்த்தத்தை எடுத்துக் கூறியுள்ளார். இதையும் படிக்க: கண்ணாடி போல மின்னும் தெருக்கள்… இந்தியாவின் தூய்மையான நகரம், மாநிலம் எது தெரியுமா..? மற்றொரு யூசர், “உண்மையைச் சொல்வதென்றால் கனடாவில் படிக்கும் மாணவர்கள் உணவகத்தில் வேலை செய்வது பொருளாதாரத்திற்காக பகுதி நேர வேலையாக இருக்கலாம். அதை வேலையின்மை என்று சொல்லக்கூடாது. மேற்கத்திய நாடுகளில் இது போன்ற வேலைகளை மாணவர்கள் செய்வது சாதாரணமானதுதான்” என விளக்கியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.