TREND

நடனமாடிக் கொண்டிருந்தபோது "கர்பா கிங்"-ற்கு நடந்த சோகம்!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புனேவில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களின்போது நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “கர்பா கிங்” என்று அழைக்கப்பட்டு வந்த அசோக் மாலி, மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாக்கன் பகுதியில் கர்பா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனமாடி கொண்டிருந்தபோது ரசிகர்கள் முன்னிலையிலேயே மாரடைப்பால் காலமானார். அற்புதமான கர்பா நடன கலைஞரின் எதிர்பாராத முடிவு நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்களின் கண்முன்னே நிகழ்ந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 50 வயதான கர்பா கலைஞர் அசோக் மாலி நடனமாடி கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பால் சரிந்து விழுந்த காட்சி அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. துக்கமாக மாறிய மகிழ்ச்சியான சந்தர்ப்பம்: ஆன்லைனில் வேகமாக ஷேரான வீடியோவில் அசோக் மாலி தனது மகன் பவேஷ் உடன் சேர்ந்து Chakan என்ற பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான கர்பா நிகழ்வில் உற்சாகத்துடன் நடனமாடுவதை காண முடிகிறது. “Ghoonghat Mein Chand Hoga Aanchal Mein Chandni" என்ற ஒரு பிரபலமான பாடலுக்கு தந்தை, மகன் இருவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர். இவர்களின் ஆட்டத்தை அங்கிருந்த கூட்டத்தினர் கண்டு ரசித்துக் கொண்டிருந்தபோதே அசோக் மாலி திடீரென மயக்கமடைந்து முழங்காலை தரையில் ஊன்றி அப்படியே சரிந்து விழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இதையும் படிக்க: அனைத்து பெண்களுக்கும் இலவச வாஷிங் மெஷின்… மத்திய அரசு திட்டம் - உண்மை என்ன? தந்தை மயங்கி கீழே விழுந்ததை கண்டு பவேஷ் அசோக் மாலியை நோக்கி விரைந்தார். மேலும் அருகில் இருந்தவர்களும் அசோக் மாலிக்கு என்னவாயிற்று என்று பதறி அவருக்கு உதவ விரைந்ததால், சூழ்நிலை சட்டென்று பதற்றமாக மாறியது. இதனைத் தொடர்ந்து கர்பா கிங் அசோக் மாலி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் அறிவித்தனர். அசோக் மாலியின் எதிர்பாராத மரணம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கர்பா கலைக்கான அசோக் மாலியின் அர்ப்பணிப்பு மிகவும் வியக்கத்தக்கது என்று பாராட்டினர். “நாங்கள் அனைவரும் திருவிழாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்து கொண்டிருந்தோம், ஆனால் எல்லாம் ஒரு நொடியில் மாறியது. என்ன நடந்தது என்பதை ஏற்று கொள்வது என்பது உண்மையில் கடினம்” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார். இதையும் படிக்க: 75 மணிநேரம் பயணம்… 4,189 கி.மீ. தூரம்… நாட்டில் மிக நீண்ட தூரம் செல்லும் ரயில் பற்றி தெரியுமா..? கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, அசோக் மாலி கர்பா பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது திறமை மற்றும் கர்பா நடனக் கலை மீதான ஆர்வத்திற்காக பெரிதும் மதிக்கப்பட்டார். நவராத்திரி சீசனையொட்டி பல்வேறு இடங்களில் கர்பா நிகழ்வுகளை வழிநடத்த அவருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த நிலையில் அவரது இந்த திடீர் மரணம் கர்பா ரசிகர்களுக்கு பேரிடியாக உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.