TREND

திருமண கோலத்தில் லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன்..இணையத்தில் வைரல்!

ஏஐ ஸ்டார்ட்அப் இணை நிறுவனர், கேசி மேக்ரெல், காலக்கெடு காரணமாக அவரது திருமணத்தில் லேப்டாப்பில் வேலை செய்துள்ளார். அவர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் அமர்ந்து வேலை செய்யும் வீடியோவை அவருடன் பணிபுரியும் டோரே லியோனார்ட் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வேலை-வாழ்க்கை சமநிலை பற்றிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் மக்கள் கலவையான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் மேக்ரெலின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளனர். மற்றவர்கள் இது ஆரோக்கியமற்ற பணி கலாச்சாரத்தை முன்னெடுப்பதாக விமர்சித்துள்ளனர். வைரலான இந்த புகைப்படத்தில், கேசி மேக்ரெல் தனது திருமணத்தில், விருந்தினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, தனது லேப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டோரே லியோனார்ட் இந்த புகைப்படத்தை அவரது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையும் படிக்க: மோமோஸ்" பெயரில் டெல்லி தெருவோர வியாபாரியின் செயல்!… திகைத்த நெட்டிசன்ஸ் மேக்ரெலின் திருமணம் நடைபெறவிருந்த அதே நேரத்தில் ஒரு அவசர வேலை வந்ததால் வேறுவழியின்றி தனது வாழ்க்கையின் முக்கியமான நாளில் மேக்ரெல் அந்த வேலையை முடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருந்தது என்று கூறிய லியோனார்ட் மேக்ரெலின் அவரது அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார். மேலும், தனது இணை நிறுவனர் நேரம், காலம், இடம் என எதையும் பார்க்காமல் வழக்கத்திற்கு மாறாக பணிபுரியும் பழக்கம் கொண்டவர் என்று விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார். ??? pic.twitter.com/cJnNTkqmmQ இதுகுறித்து நெட்டிசன்கள் கூறும் கருத்து என்ன?: சில லிங்க்ட்இன் பயனர்கள் மேக்ரெலின் அர்ப்பணிப்பைப் பாராட்டினாலும், மற்றவர்கள் இதுகுறித்து விமர்சித்துள்ளனர். இந்த தருணம் அதிக வேலை செய்யும் ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளனர். இத்தகைய தருணங்கள் தனிப்பட்ட மைல்கல்லுக்காக ஒதுக்கப்பட வேண்டும், மாறாக தொழில்முறை கடமைகளால் மறைக்கப்படக்கூடாது என்று பலர் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் வரும் அழுத்தத்தை சிறந்த திட்டமிடல் மூலம் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் சுட்டிக்காட்டினர். இந்த புகைப்படம் இறுதியில் பணியிட எதிர்பார்ப்புகள், அர்ப்பணிப்பு மற்றும் சோர்வு சம்பந்தப்பட்ட விவாதங்களை கிளப்பியது. நவீன தொழில் வல்லுநர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டின் தேவைகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது பற்றிய கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. “நான் உறுதியாகக் கூறுகிறேன், அவருடைய மனைவி கண்டிப்பாக மகிழ்ச்சியாக இல்லை. இந்த உறவு அதிகப்பட்சம் 1 வருடம் வரை தாக்குபிடிக்கும்,” என்று எக்ஸ் யூசர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு யூசர், “விவாகரத்து கோரிக்கை வரை காத்திருக்க முடியாது” என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.