TREND

நாய்கள், பூனைகளை அரவணைக்கும் கூலி தொழிலாளிக்கு குவிந்த நிதி உதவி!

பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் உள்ள ஒரு கூலி தொழிலாளி, தனது பகுதியில் சுற்றித்திரியும் விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து பராமரித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது. ‘லியா தி கோல்டன் இண்டி’ என்ற பெண் அவரது இன்ஸ்டாகிராமில் டிசம்பர் 2023ல் ராமய்யா மாமாவின் கதையை பகிர்ந்துள்ளனர். அதில் ஒயிட்ஃபீல்டில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் ராமய்யா மாமா, அந்த இடத்திற்குள் காலணிகளை சரிசெய்வது மட்டுமல்லாமல், நான்கு நாய்களுக்கும் ஒரு பூனைக்குட்டிக்கும் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வருகிறார். பல ஆண்டுகளாக அவர் நாய்கள், பூனைக்கு உணவளித்து கவனித்து வருகிறார். மேலும் அவைகள் நோய்வாய்ப்பட்டால் அல்லது காயமடைந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட விஷயங்களை முழு மனதுடன் செய்து வருகிறார்.” என பாராட்டி ஷேர் செய்திருந்தார். அவரது செல்லப்பிராணிகளைத் தவிர, மேலும் 15 விலங்குகளையும் அவர் கவனித்து வருகிறார். இதுகுறித்து விளக்கிய லியா தி கோல்டன் இண்டி என்ற பெண், “இந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பெங்களூரில் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது அங்கு சென்றால், உண்மையான அன்பு, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர் பழைய காலணிகளை சரிசெய்யும் அந்த சிறிய இடத்தில், எப்போதும் குறைந்தது 3 நாய்கள் தூங்குவதையும், ஒரு சிறிய பூனைக்குட்டி விளையாடுவதையும் நீங்கள் காணலாம். அவரிடம் பகிர்ந்து கொள்ள அதிகம் இல்லை என்பது போல் தோன்றலாம், ஆனால் அவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார். உலகை மாற்ற அது எப்போதும் போதுமானதாக இருக்கும்.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ ஒன்றில், கடந்த ஆண்டு ராமையா மாமாவின் கடையை கடந்து செல்லும் போது அவரைச் சந்தித்ததாகவும், அவரது அன்பான குணத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், அவருக்காக நிதி திரட்ட முடிவு செய்ததாகவும் லியா தி கோல்டன் இண்டி கூறுகிறார். மேலும் அவருக்கு நாடு முழுவதும் இருந்து நிதி குவிந்துள்ளது என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் நிதியை வசூலித்த பிறகு நிதி கொடுத்தவர்களின் பெயர்கள் அனைத்தையும் ஒரு அட்டையில் எழுதி ராமையா மாமாவிடம் கொடுத்து விட்டதாகும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதுகுறித்த வீடியோவையும் இணைத்துள்ளார், அதில் அவர் மகிழ்ச்சியான கண்ணீருடன் அழுதது ஒரு உணர்ச்சிகரமான தருணம். இதையும் படிக்க: தன்னைத் தானே விவாகரத்து செய்த பெண்.. என்ன காரணம் சொன்னார் தெரியுமா? நான்கு மாதங்களுக்கு முன்பு ராமையா தனது மனைவியை இழந்ததாகவும், தனது மகளை தானே ஆதரிப்பதாகவும் அழுதபடி எங்களிடம் கூறினார். அவரது வாழ்க்கையை மாற்ற நாங்க நிதி திரட்ட முடிவு செய்தோம், தற்போது அவரது முகத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருப்பதைக் காணலாம். மறுநாள் நாங்கள் திரும்பிச் சென்றபோது, ​​எங்களின் கார்டை அச்சடித்து, மிகவும் பெருமையுடன் தனது கடையில் தொங்கவிட்டிருந்தார். ஒருவேளை, கருணையும் பெருந்தன்மையும் உள்ள அவரது நினைவூட்டலாக இது இருக்கலாம், ”என்று அந்த பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.