TREND

மனைவி போட்ட கண்டிஷன்... ஒரே இரவில் கோடீஸ்வரனான மெக்கானிக்... மைசூரில் சுவாரஸ்யம்!

மனைவி போட்ட கண்டிஷனால், கர்நாடகாவைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா… நம்பத்தான் வேண்டும். மைசூரைச் சேர்ந்த மெக்கானிக் அல்தாஃப். வாழ்க்கையில் அதிர்ஷ்டவசத்தால் நல்லது நடந்துவிட்டால் லாட்டரி அடித்துவிட்டது என்று கூறக் கேட்டிருக்கிறோம். அதுபோல் கர்நாடக மாநிலம் மண்டியா அருகே உள்ள பாண்டியபுராவைச் சேர்ந்த மெக்கானிக் கடை வைத்துள்ள அல்தாஃப்புக்கு, கேரள மாநிலம் வயநாடு சென்ற இடத்தில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக கேரள லாட்டரியை வாங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார் அல்தாஃப். ஆனால் பரிசுத் தொகை எதுவும் பெரிதாகக் கிடைத்ததில்லை. ஆனால் இம்முறை அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அண்மையில் வயநாடு சென்று 500 ரூபாய் கொடுத்து திருவோணம் பம்பர் லாட்டரியை அல்தாஃப் வாங்கினார். என்ஜிஆர் லாட்டரி என்ற தமிழர் ஒருவர் நடத்தும் கடையில் அவர் வாங்கிய டிக்கெட்டுக்கு கடந்த வாரம் நடந்த குலுக்கலில் பரிசுத் தொகையான 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. பரிசு வென்ற அல்தாஃப் அதை உறவினர்களிடம் கூறியதும் நம்பவில்லை. தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை காட்டிய பிறகே நம்பியுள்ளனர். இந்த லாட்டரிப் பணம் தனது 2 குழந்தைகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த லாட்டரியில் கிடைத்த பணம் உதவும் என்று தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக லாட்டரி பழக்கம் வாங்கும் பழக்கத்தால் அல்தாஃபுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவரின் மனைவி போட்ட கண்டிஷனான உத்தரவால் தான் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. எப்படி என்றால், வயநாட்டில் இருந்து ரூ.1000 கொடுத்து இரண்டு லாட்டரிகளை அல்தாஃப் வாங்கி வந்துள்ளார். இதில், ஒரு லாட்டரியை தனது நண்பருக்கு கொடுக்க நினைத்துச் சென்றுள்ளார். Also Read | Chennai Rain : கிண்டி 5 பர்லாங் சாலையில் ஒரே நாளில் வடிந்த மழைநீர்.. எப்படி தெரியுமா? ஆனால், அல்தாஃபின் மனைவி நண்பருக்கு கொடுக்கக்கூடாது என்றும், இரண்டு லாட்டரியையும் நாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் கண்டிஷனாக கூறியதால், அல்தாஃப் நண்பருக்கு அந்த லாட்டரியை கொடுக்கவில்லை. இதற்கு மறுநாளே குலுக்கலில் நண்பருக்கு கொடுப்பதற்காக அல்தாஃப் எடுத்துச் சென்ற லாட்டரி நம்பருக்கு ரூ.25 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. இப்படியாக மனைவியின் பிடிவாதத்தால் தற்போது அல்தாஃப் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.