TREND

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்கு திரும்பாமல் இருப்பது ஏன் தெரியுமா?

போயிங் ஸ்டார் லைனர் விண்வெளி கப்பல் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை அடுத்து ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்பாமல் இருப்பதற்கான காரணம் ஏன் என பலரும் வினவி வருகின்றனர். இரண்டு விண்வெளி வீரர்களும் வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விண்வெளி வீரர்களும் அவசரமாக விண்வெளிக்கு திரும்ப வேண்டியதில்லை என்பதுதான் அவர்கள் பூமிக்கு திரும்பாமல் இருப்பதற்கான உண்மையான காரணமாகும். விண்ணில் பூமியை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு அங்கு கிடைக்கின்றன. ஏதேனும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் பூமியிலிருந்து அவை விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படும். பொதுவாகவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் குறைந்தது 6 மாதங்களாவது அங்கு செலவிடுவார்கள். அதன்படி பார்த்தால் வில்ஸ்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் தங்கும் காலம் நீட்டிக்கபட்டது மிகவும் சாதாரணமான, வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். இதையும் படிக்க: “இனி வரும் நாட்கள் ரொம்ப ஆபத்தானது” - பீதியை கிளப்பும் ஆய்வு! - மனித குலத்தை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! மேலும் இருவரும் பிப்ரவரி 2025-ல் பூமிக்கு திரும்பும்போது அவர்களோடு ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களும் தங்களது 6 மாத கால பணியை முடித்துக் கொண்டு அவர்களோடு பூமிக்கு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளி கப்பலும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கிய பயணத்திற்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அவசரகால முன்னேற்பாடுகள்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போதைய நிலையில் உயிர்காக்கும் கருவியாகவும், அவசரகால தேவைக்காகவும் 5 ஸ்பேஸ்கிராஃப்டுகள் உள்ளன. அந்த 5 ஸ்பேஸ்கிராஃப்டுகளும் அவசர காலத்தில் உயிர்காக்கும் படகுகளாக செயல்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள விண்வெளி வீரர்கள் உடனடியாக அங்கிருந்து இடத்தை காலி செய்து பூமிக்கு திரும்ப இவை உதவும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வீரர்களுக்கு எரிகல் தாக்குதல் போன்ற எதிர்பாராத விபத்துகள் அல்லது வேறு ஏதேனும் அவசர காலங்களின்போதும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. இதையும் படிக்க: உலகின் மிகச்சிறிய ரூபிக்ஸ் கியூப் இதுதான்.. இதன் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்ஸ்மோருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்ஸ்மோர் ஆகிய இருவருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்களது தங்கும் காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீட்டிக்கப்பட்டிருப்பது அவர்களது வழக்கமான பணியின் ஒரு பகுதி தானே தவிர எந்தவித ஆபத்தும் அவர்களுக்கு நேரவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.