TREND

மனைவியுடன் உணவு டெலிவரி செய்த ஜொமோட்டோ சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டா (Zomato) சிஇஓ தீபிந்தர் கோயல் மற்றும் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி கியா கோயலும் சமீபத்தில் டெல்லி முழுவதும் உணவு ஆர்டர்களை தனிப்பட்ட முறையில் டெலிவரி செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிவப்பு நிற ஜொமோட்டோ டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு, இந்த ஜோடி டெலிவரி பார்ட்னர்களின் பணிகளை ஏற்றுக்கொண்டதன் மூலம், அவர்களின் வணிக செயல்பாடுகள் பற்றிய கள நிலவரங்களை தத்ரூபமாக பெற வாய்ப்புள்ளது. இதுதொடர்பான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்ட தீபிந்தர், “ஜியா கோயலுடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு ஆர்டர்களை வழங்குவதற்காக வெளியே சென்றேன்” என்று பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில், ஜியா பைக்கின் பின்னார் அமர்ந்தபடி, நெருக்கடியான தெருக்களில் தீபிந்தர் செல்வதை அந்த புகைப்படம் காட்டுகிறது. மற்றொரு புகைப்படம், அவர்கள் டெலிவரி முகவரியை போனில் தேடிக்கொண்டிருப்பதை காட்டுகிறது. ஜொமோட்டோ டெலிவரி பையை தோளில் மாட்டி, ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் மொபைலையும் பிடித்தபடி தீபிந்தர் இருப்பது ஒரு அற்புதமான படம். குருகிராமில் உள்ள உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் அவர் உரையாடுவதும் புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. உணவு ஆர்டர்களை டெலிவரி செய்த தம்பதிக்கு நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவிதுள்ளனர். அதில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம். இதையும் படிக்க: ரயில்வே ஸ்டேஷனுக்கு பாஸ்போர்ட், விசா எடுத்து செல்ல வேண்டுமா..? இந்தியாவில் இப்படியொரு இடம் இருக்கா! “அலமோட் அலுவலகத்தில் உங்களைப் பார்த்ததில் நாங்கள் மிகவும் உற்சாகமடியந்தோம். நீங்கள் செய்யும் பணி மற்றும் உங்களின் தொழில்முனைவோர் திறன் மீது இன்னும் மரியாதை கூடுகிறது! என ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இப்போதாவது டெலிவரி நபர்களின் வலியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இனியாவது அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவீர்கள் என்று நம்புகிறேன்" என இன்னொருவர் கருத்தை பகிர்ந்துள்ளார். உங்களுக்கு டிப்ஸ் ஏதாவது கிடைத்ததா? என ஒருவர் கிண்டலாக கேட்டுள்ளார். மற்றொருவர் “அருமையான மார்க்கெட்டிங்” என சுட்டிக்காட்டியுள்ளார். ஜொமோட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் 2008-ல் பங்கஜ் சத்தாவுடன் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கினார். உணவு விநியோக நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு, தீபிந்தர் பெயின் நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றினார். தீபிந்தர் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.