TREND

51,000 கிலோ லோடை சுமந்து செல்லும் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம்.. அதன் அளவு எவ்வளவு தெரியுமா..?

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான பெலுகா எக்ஸ்எல் (Beluga XL), கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக தரையிறங்கியது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீனாவில் உள்ள தியான்ஜின் பின்ஹாய் சர்வதேச விமான நிலையத்தில் (Tianjin Binhai International Airport) இருந்து புறப்பட்ட விமானம் திங்கட்கிழமை அதிகாலை 5:47 மணிக்கு வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுத்தத்தின் நோக்கம் பணியாளர் ஓய்வு, FDTL (Flight Duty Time Limitations) மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து, செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்திற்கு (Bahrain International Airport) செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். Also Read: Gold Rate | தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்… இன்றைய விலை எவ்வளவு தெரியுமா? ஏர்பஸ் இணையதளத்தின் தரவுகளின்படி, விமானத்தின் மொத்த நீளம் 207 அடி, உயரம் 62 அடி மற்றும் இறக்கை 197 அடி மற்றும் 10 அங்குலங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பெலுகா எஸ்டியின் 44 டன் கொள்ளளவை விட அதிகபட்சமாக 51 டன்கள் பே லோடை (payload) கொண்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அக்டோபர் 8ஆம் தேதி தரையிறங்கியபோது, ​​பெலுகா எக்ஸ்எல்லின் முதல் பார்வையை பெற்றது. ஏர்பஸ் ஏ321க்கான முக்கியமான பாகங்களை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5:19 மணிக்குப் புறப்பட்டு, சீனாவில் உள்ள தியான்ஜின் பின்ஹாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றது. விமானம் அக்டோபர் 13ஆம் தேதி கொல்கத்தா திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிட்டத்தட்ட 24 மணிநேரம் தாமதமானதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பெலுகா எக்ஸ்எல் என்பது பெலுகா எஸ்டியின் மேம்படுத்தப்பட்ட மற்றும் பெரிய பதிப்பு ஆகும். முதன்முறையாக, கொல்கத்தாவின் NSCBI விமான நிலையம், அதன் தொடரிலேயே மிகப்பெரிய ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல்லை வரவேற்றது. அத்தியாவசிய விமானக் கூறுகளை இந்த விமானம் ஏற்றிச் சென்றது. இந்த விமானத்தை கையாளும் வசதி கொண்ட, கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரே விமான நிலையம் என்பதால், பணியாளர் ஓய்வு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் விமானம் நிறுத்தப்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.