TREND

Diwali Holiday | ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 9 நாள் விடுமுறையை அறிவித்த மீசோ நிறுவனம்!

பண்டிகைகளின்போது பொதுவாக ஊழியர்கள் விடுமுறை அதிகமாக கேட்டாலும் கொடுக்கப்படுவதில்லை என்ற அதிருப்தி செய்திகளை சமூக வலைத்தளங்களில் நாம் அவ்வப்போது பார்த்திருப்போம் இந்த நிலையில் ஈ-காமர்ஸ் தளமான மீசோ அனைவரது மனங்களையும் வென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 9 நாள் விடுமுறையை அறிவித்துள்ளதுதான். சமீபத்தில் ஒரு LinkedIn போஸ்டில், “ரீசெட் மற்றும் ரீசார்ஜ்” செய்வதற்காக ஊழியர்கள் ஒன்பது நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு" என மீசோ அறிவித்துள்ள செய்து வெளியாகியுள்ளது. ஆனால் மீசோ நிறுவனம் இப்படி விடுமுறை அறிவித்துள்ளது இது முதல்முறை அல்ல, தொடர்ந்து நான்காவது முறையாக ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “லேப்டாப்புகள், ஸ்லாக் மெசேஜ்கள், ஈ-மெயில் , மீட்டிங் அல்லது ஸ்டாண்ட்-அப் கால்கள் என எதுவும் இல்லை, 9 நாட்களுக்கு வேலை தொடர்பான கவலை வேண்டாம்” என நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விழாக்கால விடுமுறையை “ரீசெட், ரீசார்ஜ் மற்றும் பிரேக்” என்று அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஊழியர்கள் அக்டோபர் 26 முதல் நவம்பர் 3 வரை ஓய்வு எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது மற்றும் எங்களின் வெற்றிகரமான மெகா பிளாக்பஸ்டர் விற்பனைக்குப் பிறகு ஊழியர்களின் ஓய்வு மற்றும் மகிழ்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த இடைவேளை, வரவிருக்கும் ஆண்டை ஒரு புதிய மற்றும் உற்சாகமான தொடக்கத்திற்காக நம் மனதையும், உடலையும் ரீசார்ஜ் செய்ய உதவும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையும் படிக்க: கருவுற்று குட்டிகளை பெற்றெடுக்கும் ஆண் விலங்கு எது தெரியுமா? ஆச்சரியமளிக்கும் தகவல்! இந்த போஸ்டிற்கு மீசோ ஊழியர்கள் மட்டுமின்றி நெட்டிசன்கள் இடையேயும் பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது. ஏறக்குறைய 19,000 ரியாக்ஷன்களுடன், பலவிதமான கமெண்ட்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். LinkedIn-ல் இ-காமர்ஸ் மார்க்கெட்டிங் ஆலோசகர் ஒருவர், அன்புள்ள மீசோ குழு, அனைத்து ஊழியர்களுக்கும் 9 நாட்கள் இடைவேளை கொடுக்கும் முடிவை நான் பாராட்ட விரும்புகிறேன். ஒரு B2B நிபுணர், இந்த விழாக்கால நேரத்தில் இப்படி ஒரு விடுமுறை அறிவிப்பை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நம்பமுடியாத வகையில் உள்ளது. மீசோ, நீங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள் என பாராட்டியுள்ளார். இதையும் படிக்க: Gold Mines Of India | இந்தியாவில் இருக்கும் தங்க சுரங்கங்கள் பற்றி தெரியுமா? மற்றொருவர் “வாழ்க்கையில் பணம் மட்டும் முக்கியமல்ல, சில நேரங்களில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான கவனிப்பும் முக்கியம் என்பதை மீசோ உணர்ந்துள்ளது” என கூறியுள்ளார். இந்த அணுகுமுறையை முற்றிலும் விரும்புகிறேன்! பிரத்யேக “ரீசெட் மற்றும் ரீசார்ஜ்” இடைவேளை ஊழியர்களின் மன மற்றும் உடல் நலனை எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டுகிறது என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.