TREND

உலகின் மிகச்சிறிய ரூபிக்ஸ் கியூப் இதுதான்.. இதன் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

மஞ்சள், சிவப்பு, நீலம், ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என ஆறு நிறங்களை கொண்டது கியூப் விளையாட்டு ஆகும். கியூப் கண்டுபிடிப்பாளரின் பெயரான எர்னோ ரூபிக் என்ற பெயரில் ரூபிக்ஸ் கியூப் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் இரண்டு வகையான நபர்கள் உள்ளனர். ஒருவர் ரூபிக்ஸ் கியூப்பிற்கு தீர்வு காண்பவர்கள். மற்றவர்களோ தீர்வு காண இயலாதவர்கள். ஆனால் நீங்கள் ரூபிக்ஸிற்கு தீர்வு காண்பவராக இருந்தாலும் சரி அல்லது தீர்வு காண இயலாதவர்களாக இருந்தாலும் சரி. உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூபிக்ஸின் புதிய எடிஷன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானிய டாய் நிறுவனமான மெகாஹவுஸ், சமீபத்தில் உலகின் மிகச்சிறிய ரூபிக்ஸ் கியூபை அறிமுகப்படுத்தியது. இது ஒரு விரலின் கீழ் மறைத்து வைக்கக்கூடிய மிகவும் சிறிய அளவாக இருக்கும், ஆனால் அதன் விலை உங்களால் யூகிக்க இயலாதது. ரூபிக்ஸ் கியூப் என்பது ஒரு 3D பஸ்சில் ஆகும். இந்த ரூபிக்ஸ் கியூப் அலுமினியத்தால் செய்யப்பட்டது, இது வெறும் 0.33 கிராம் எடையும், ஒவ்வொரு பக்கமும் 0.19 அங்குலங்கள் கொண்டது, இது ஒரு சாதாரண ரூபிக்ஸ் கியூப் அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு ஆகும். இதையும் படிக்க: ரயில் ஜன்னல் ஓரத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமி.. அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்! - வைரல் வீடியோ! அறிக்கையின்படி, மெகாஹவுஸ் நிறுவனமானது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த உலகின் மிகச்சிறிய கியூபை உருவாக்கத் தொடங்கியது, அதாவது அதன் தயாரிப்பை 2022 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1974 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரூபிக்ஸ் கியூப்பின் 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிறிய கியூபை உருவாக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது என்று மெகாஹவுஸ் தெரிவித்துள்ளது. அதாவது 50 வது ஆண்டு விழாவில் மிகச்சிறிய கியூபை அறிமுகப்படுத்தி ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த மினியேச்சர் தயாரிப்பின் உருவாக்கத்தை முடிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது. அதன் அளவு சிறியதாக இருந்தாலும், அதன் சிக்கலான கைவினைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால், அது ரூ.4,39,595.56 என்ற விலையைக் கொண்டுள்ளது. க்யூப் இப்போது மெகாஹவுஸ் இணையதளத்தில் ப்ரீ ஆர்டர் விற்பனையில் கிடைக்கிறது, மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ ஃபேப்ரிகேஷன் மூலம் ஜப்பானிய கைவினைத்திறனை உள்ளடக்கிய ஒரு தயாரிப்பை உருவாக்கியதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று மெகாஹவுஸ் தலைவர் அகிஹிரோ சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ரூபிக்ஸ் கியூப் கடந்த ஆகஸ்டு மாதம் கின்னஸ் உலக சாதனைகளால், இதுவரை உருவாக்கப்பட்ட மிகச் சிறிய ரொடேடிங் ரூபிக்ஸ் என அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.