TREND

ஒரே நேரத்தில் 38 நாய்களை நடைபயிற்சிக்கு கூட்டிச் சென்ற நபர்! - எதற்காக தெரியுமா?

கனடாவைச் சேர்ந்த மிட்செல் ரூடி என்ற நபர், ஒரே நேரத்தில் 38 நாய்களை நடை பயிற்சிக்கு கூட்டிச்சென்று அதிகாரப்பூர்வமாக புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு 36 நாய்களை கூட்டிச் சென்றதே சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை மிட்செல் முறியடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு செப்டம்பர் 5, 2024 அன்று தென் கொரியாவின் கோசன் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வை கனேடிய தொண்டு நிறுவனமான BONK மற்றும் கொரிய K9 மீட்பு (KK9R) அமைப்பினர் ஸ்பான்ஸர் செய்திருந்தனர். இந்த நடை பயிற்சி ஒரு பெரிய சாதனை மட்டுமல்ல; நாய்கள் மீட்புப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் கொண்டது. இதில் கலந்து கொண்ட 38 நாய்களும் இங்குள்ள உள்ளூர் சமூகத்தால் மீட்கப்பட்டு, பிறர் தத்தெடுப்பதற்காக KK9R-ல் பட்டியலிடப்பட்டுள்ளன. நாய்க்குட்டி ஆலைகளில் இருந்தும், தென் கொரியாவின் இறைச்சித் தொழிலில் இருந்தும் நாய்களை மீட்பதில் இந்த தொண்டு நிறுவனம் அக்கறை கொண்டுள்ளது. BONK திட்டத்திற்கு முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவரான மிட்செல், கூறுகையில், “இந்தக் குழு சாதனையை நிகழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாய்கள் அனைத்தும், இவற்றில் சில நாய்க்குட்டி ஆலையைச் சேர்ந்தவை. அவற்றில் சில இறைச்சிக் கடைக்கு கொண்டு செல்லபட்டவை. இவை KK9R அமைப்பால் மீட்கப்பட்ட நாய்கள். இந்த விலங்குகள் யாவும் அன்பான வீடுகளில் வளர்வதற்கு தகுதியானவை” என்றார். மேலும் அவர் கூறுகையில், “நாய்களை மீட்பது குறித்து பல தவறான கருத்துகள் சமூகத்தில் நிலவுகின்றன. இவை சிறந்த விலங்குகள். இவை அனைத்தும் நல்ல வீட்டில் வாழ தகுதியானவை. இந்த நாய்களுக்கு கொஞ்சம் அன்பு தேவை” என்றார். உலக சாதனையை முறியடிக்க முயற்சித்ததற்குக் காரணம், நாய்களின் எண்ணிக்கை மட்டுமல்ல; அதன் உரிமையாளர் நாய்களை ஒரு கிலோ மீட்டர் (0.6 மைல்) தூரம் நடந்து கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நாய்கள் எவ்வளவு வலிமையானவை என்பதை வெளிக்காட்டவும், குடும்பங்களால் தத்தெடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவுமே இந்த யோசனை செயல்படுத்தப்பட்டது என்று மிட்செல் கூறினார். “இந்த நாய்களை சாம்பியன்களாக மாற்றும் வகையில் நாங்கள் ஏதாவது செய்ய விரும்பினோம். இவை நல்ல நாய்கள். வீடுகளில் சந்தோஷமாக வாழ தகுதியானவை” என்றார். இதையும் படிக்க: Bathroom Vs Washroom: குளியலறைக்கும் கழிவறைக்கும் என்ன வித்தியாசம்?.. 99% பேருக்கு இது தெரியாது! சமீபகாலமாக தென் கொரியாவில் விலங்குகள் நலன் மீது அக்கறை அதிகரித்துள்ள நிலையில், இந்த சாதனை நிகழ்வு சரியான சமயத்தில் நடைபெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். மேலும் இந்த ஆண்டு நாய் இறைச்சி சாப்பிடுவதை தடை செய்யும் மசோதாவுக்கு தென் கொரியா ஒப்புதல் அளித்துள்ளது. இது விலங்குகள் மீதான மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.