TREND

மோமோஸ்" பெயரில் டெல்லி தெருவோர வியாபாரியின் செயல்!... திகைத்த நெட்டிசன்ஸ்

நாடு முழுவதும் உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சுவையான உணவுகளில் மோமோஸ் முக்கியமான ஒன்று. தேசிய தலைநகரான டெல்லியில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் ஒரு மோமோ கடை இருப்பதை நம்மால் காண முடியும். ஏனென்றால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மோமோஸ் மிகவும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டியாக இருக்கிறது. வேகவைத்து, வறுத்து அல்லது கிரேவியில் ஊற வைத்து என பல வடிவங்களில் விற்கப்பட்டு வரும் மோமோஸ்க்களை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்பி சுவைக்கின்றனர். ​​ஆனால் தற்போது டெல்லியில் விற்கப்பட்டு வரும் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான வகை மோமோஸ் பலரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது மற்றும் சிலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அது என்னவென்றால் பழத்தில் தயார் செய்யப்படும் ஃப்ரூட் மோமோஸ் ஆகும். இதன் விலை ரூ.170-ஆக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய ஃப்ரூட் மோமோஸை தயாரிக்கும் ஒரு தெரு வியாபாரி அடங்கிய வீடியோவானது @realfoodler என்ற இன்ஸ்டா அக்கவுண்ட் மூலம் “நான்கு பழங்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஃப்ரூட் மோமோஸ்” என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. அந்த வீடியோ கிளிப்பில் பழங்கள், பால், லிக்விட் சீஸ் மற்றும் கிரீம் உட்பட, உப்பு, மிளகு மற்றும் கலவையான மூலிகைகள் ஆகியவற்றுடன் சீசனிங் செய்யப்பட்ட வழக்கத்திற்கு மாறான பொருட்களை கொண்டு குறிப்பிட்ட விற்பனையாளர் ஃப்ரூட் மோமோஸை தயாரிக்கும் காட்சி அடங்கி உள்ளது. மேற்கண்டவற்றோடு சேர்த்து அவர் வறுத்த பனீர் மோமோஸை சேர்த்து வாடிக்கையாளருக்கு ஃப்ரூட் மோமோஸை வழங்குகிறார். வீடியோவில் “டெல்லியில் எங்கும் இந்த உணவை நீங்கள் எங்கும் காண முடியாது” என்றும், தனது இந்த தனித்துவ தயாரிப்பு குறிப்பாக ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த விற்பனையாளர் கூறுகிறார். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பல யூஸர்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதையும் படிக்க: கண்ணாடி போல மின்னும் தெருக்கள்… இந்தியாவின் தூய்மையான நகரம், மாநிலம் எது தெரியுமா..? பலர் தங்கள் கமெண்ட்ஸ் மூலம் அவநம்பிக்கை மற்றும் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு யூஸர் நகைச்சுவையாக, “நீங்கள் துப்பாக்கி குண்டுகளை சேர்க்க மறந்துவிட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார், மற்றொருவர்,கிண்டலாக “ஜிம் செல்பவர்களுக்காக ஃப்ரைட் மோமோ. சகோதரரே, என் உடலை கட்டமைக்க எனக்கு உதவுங்கள்; நான் தினமும் மோமோஸ் சாப்பிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூசர் இந்த வித்தியாசமான டிஷ் “சமையல் உலகத்தை நாசமாக்குகிறது” என்கிறார். மற்றொரு யூஸரோ “இவர் செய்தது தொழில்நுட்ப ரீதியாக உடலுக்கு விஷம்” என்று வேதனை தெரிவித்துள்ளார். இப்படி பலரும் இந்த ஃப்ரூட் மோமோஸ்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டு வருகின்றனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.