TREND

ரயில் ஜன்னல் ஓரத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமி.. அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்! - வைரல் வீடியோ!

இந்திய ரயில்வேயில் மொபைல் திருட்டு சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது, ​​இதேபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி, ரயில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்த வீடியோவில் ​​​​சிறுமி ஒருவர் ஜன்னல் சீட்டில் அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருக்கிறார், அப்போது ஜன்னல் வழியாக திருடன் ஒருவன் சிறுமியின் மொபைலை திருடி செல்வதை காண முடிகிறது. ஆனால் அந்த நபர் சிறுமியுடன் விளையாடினாரா அல்லது அவர் உண்மையில் திருடனா என்பது தெரியவில்லை. ஏனெனில் வீடியோ எடுக்கும் நபர், சிறுமிக்கு உதவுவதற்கு பதிலாக, முழு சம்பவத்தையும் கேமராவில் படம்பிடித்துள்ளார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சிறுமி தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தாலும், யாரும் உதவ முன்வரவில்லை. எனவே இதை ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ என்று சிலர் கூறுகின்றனர். இதையும் படிக்க: கனடாவில் வெயிட்டர் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் - வைரல் வீடியோ இந்த வீடியோவில் இரண்டு சிறுமிகள் ரயிலின் சீட்டில் அமர்ந்திருக்கின்றனர். மஞ்சள் நிற ஆடை அணிந்த ஒரு சிறுமி, ஃபோனை பார்த்துக் கொண்டிருக்க, ஜன்னலின் வழியாக திருடன் ஒருவன், சிறுமியின் கையிலிருந்து போனைப் பிடுங்குகிறான். இதனையடுத்து சிறுமி எனது போனை விட்டு விடுங்கள் என்று சத்தமாக கத்துகிறாள். எனினும் திருடன் சிறுமியின் கையிலிருந்து மொபைலைப் பறித்துக்கொண்டு ஓடியவுடன், அருகில் அமர்ந்திருந்த பயணிகளிடம் மாமா என் போனை திருடிக் கொண்டு ஓடி விட்டார் என்று சிறுமி கூறுகிறாள். இந்த முழு சம்பவத்தையும் ஒரு நபர் தொடர்ந்து வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. ரயிலில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள். ஜன்னல் வழியாக அந்த சிறுமியிடம் இருந்து போனை எப்படி பறித்துக்கொண்டு திருடன் ஓடினான் என்று பாருங்கள். இப்போதெல்லாம் போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது. "ट्रेन में बैठते समय सावधानी बरतें" देखिए कैसे खिड़की में से बच्ची से फोन छीनकर चला गया !! आजकल फोन चोरी वाली घटनाएं कुछ ज्यादा बढ़ रही हैं !! #ViralVideo #Trending #tren pic.twitter.com/C4bRzGKcfY இந்த பதிவு வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில யூசர்கள் தங்களது கருத்தை கூறியுள்ளனர். சிலர் இந்த வீடியோவை நம்பினாலும், சிலரோ இதனை உண்மை என நம்பவில்லை. இந்த விடியோவை குறித்து யூசர் ஒருவர் கூறியதாவது, இதுபோன்ற இடங்களில் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், எங்கு பார்த்தாலும் ஃபோன்கள், லேப்டாப்கள், நகைகள் திருடு போகின்றன என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், இது நாடகம் என்று தெளிவாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ நிதானமாக அமர்ந்து எடுக்கப்பட்டதும், அருகில் இருக்கும் பயணி தனது சொந்த வேலையில் பிஸியாக இருப்பதும், இது ஸ்கிரிப்ட் செய்யப்பபட்டதும் தெளிவாக தெரிகிறது என்று யூசர் ஒருவர் கூறியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.