TREND

தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா... ஓடும் ரயிலில் முதியவர் செய்த அலப்பறை... ஷாக் வீடியோ...

வேகமாக இயங்கும் வாகனங்களில் ஆபத்தான வகையில் ஸ்டன்ட் செய்யும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. உயிருக்கு அதிகம் ஆபத்து உள்ளது என்று தெரிந்தும் கூட பைக்குகள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் மாணவர்கள் அல்லது இளைஞர்கள் ஸ்டன்ட் செய்யும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கின்றன. நாம் பெரும்பாலும் இளம் வயதினர் ஓடும் ரயில்களில் ஸ்டன்ட் செய்வதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், முதியவர் ஒருவர் ஓடும் ரயிலின் வாயிலில் நின்று ஸ்டன்ட் செய்வதை காண முடிகிறது. இந்த வீடியோவைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். குறிப்பிட்ட வைரல் வீடியோவில் ரயிலில் முதியவர் ஒருவர் ஆபத்தான வகையில் ஸ்டன்ட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரயில் பெட்டியின் நுழைவுக் கதவின் கைப்பிடியைப் பிடித்து சில ஆபத்தான ரயில் ஸ்டன்ட்களை முதியவர் செய்யும் காட்சிகளை வைரல் வீடியோவில் நம்மால் காண முடிகிறது. இந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட முதியவர் தலையில் துணியைக் கொண்டு தலைப்பாகையை அணிந்திருந்தார். குறிப்பிட்ட ரயில் பாக்ஸின் வெளியே கதவு கைப்பிடியை அபாயகரமாக பிடித்து தொங்கியபடியும், ரயில் கதவு படிகளின் ஓரமாக நின்று கொண்டும் மிகவும் ஆபத்தான ஸ்டன்ட்ஸ்களை செய்தார் அந்த முதியவர். உயிருக்கே ஆபத்தான இந்த ஸ்டன்ட்ஸ்களில் ஈடுபடும்போது அந்த முதியவரின் முகத்தில் எந்த பயமும் இல்லை. இவரது இந்த ரயில் ஸ்டன்ட்ஸ் உண்மையில் கரணம் தப்பினால் மரணம் என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது. ரயில் ஸ்டன்டின்போது முதியவர் சிறிது பேலன்ஸை இழந்திருந்தாலோ அல்லது ரயிலுக்கு வெளியே இருக்கும் ஏதேனும் ஒரு தூணில் மோதியிருந்தாலோ உயிர் பிழைப்பது நிச்சயம் சந்தேகமே.. ரயில் டோரின் ​​கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, ரயிலின் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டு இவர் செய்யும் சாகசம் உண்மையில் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தைத்தான் தூண்டி உள்ளது. இளம் வயதினர் தான் ஆபத்து தெரிந்தும் பொறுப்பற்ற முறையில் சாகசம் என்ற பெயரில் விபரீதத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் இந்த முதியவர் இப்படி இருக்கிறாரே என்று பலரும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதையும் படிக்க: நெருங்கும் ஆபத்து… கிழக்கு நோக்கி நகரும் பூமி… எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்! அதே நேரம் சில யூஸர்கள் முதியவரின் சாகசத்தை பாராட்டியும் உள்ளனர். “தாத்தா தனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார் போல் தெரிகிறது! ஓய்வு பெறுவதை மறந்துவிடு, இது சாகசத்திற்கான நேரம்!” என்று ஒரு யூஸர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் “ஓல்ட் மேன் அல்ட்ரா ப்ரோ மேக்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் முன் டாம் குரூஸ் தோற்றுப்போவார் என்று ஒரு வரி கமெண்ட் செய்துள்ளார். இந்த வைரல் வீடியோவிற்கு இப்படி பல நகைச்சுவையான ரியாக்ஷன்ஸ் வந்தாலும், பல யூஸர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதையும் படிக்க: Diwali Holiday | ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 9 நாள் விடுமுறையை அறிவித்த மீசோ நிறுவனம்! ஒரு யூஸர் குறிப்பிடுகையில் “இது வேடிக்கை செயல் அல்ல. பொறுப்பற்றது, மேலும் அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், இதுபோன்ற நடத்தையை நாம் ஊக்குவிக்கக் கூடாது” என கூறி உள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.