AUTOMOBILE

ஒரு முறை சார்ஜ் செய்யுங்க 108 கி.மீ ஓட்டுங்க... புதிய மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ CE 02 ஆனது, TVS உடன் இணைந்து ஜெர்மனியின் முனிச்சில் உள்ள அதன் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டெக்-லோடட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான CE04-ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, பிஎம்டபிள்யூ மோட்டர்ராட் இந்தியா தற்போது CE 02 என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது CEO4 இன் சிறிய பதிப்பாகும், இதற்கு ரூ.4.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அறிமுக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் பகிர்ந்துள்ள விவரங்களின் படி, அனைத்து புதிய பிஎம்டபிள்யூ CE 02 ஆனது ஜெர்மனியின் முனிச்சில் உள்ள அதன் தலைமையகத்தில் TVS உடன் இணைந்து உருவாக்கப்பட்டது எனவும் இது காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 என இரண்டு வண்ணங்களில் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் ரைட் ஆரம்பம்: ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தற்போது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று பார்வையிட்டு அதனை வாங்கி கொள்ளலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதர்கு முன்பாக அதில் டெஸ்ட் ரைட் செய்யலாம். இதையும் படிக்க: மழை நீரில் மூழ்கிய கார் பழுதாகாமல் இருக்க..? - நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்! சாலை இருப்பு: வடிவமைப்பைப் பொறுத்தவரை, பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் எதிர்கால அணுகுமுறையுடன் அறிமுகமாகியுள்ளது. முன்புறத்தில் முழு LED ஹெட்லைட் அமைப்பையும், நேர்த்தியான LED டெயில் லைட்டையும் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இந்த மாடல் தனித்துவமான தோற்றத்துடன் உள்ளது. ஸ்கேட் போர்ட்-ன் தோற்றத்தை கொண்டுள்ள இத ஸ்கூட்டரில் ஒரு இருகை மட்டுமே உள்ளது. சஸ்பென்சன் மற்றும் சில குறிப்பிடத்தக்க கூறுகள்: CE 02 முன்பக்கத்தில் USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜஸ்டபிள் மோனோ-ஷாக்குடன் வருகிறது. 14 இன்ச் சக்கரங்களில் இயங்கும் இந்த மின்சார ஸ்கூட்டரின், முன்பக்கத்தில் 239 மிமீ டிஸ்க்கும் மற்றும் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்கும் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் வேகம்: புதிய பிஎம்டபிள்யூ CE 02 வின், மையத்தில் 3.9kWh பேட்டரி அமைப்பால் இயக்கப்படும் ஏர்-கூல்டு சின்க்ரோனஸ் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த இ-ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 108 கிமீ வரை செல்லக்கூடிய திறன் கொண்டது (ICAT சான்றளிக்கப்பட்டது) என்று நிறுவனம் கூறியுள்ளது. இது வெறும் 3 வினாடிகளில் 0-50 கிமீ வேகத்தை எட்டும் செயல்திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.