AUTOMOBILE

புதிய 2024 TVS Jupiter 110 ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் பற்றிய விவரங்கள் இங்கே..!

டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கிறது ஜூபிடர். இந்த நிலையில் சமீபத்தில் நிறுவனம் இந்த ஸ்கூட்டரின் 2024 மாடலை அறிமுகப்படுத்தியது. 2024 TVS Jupiter பழைய வெர்ஷனை விட இன்னும் சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஜூபிடரின் இந்த புதிய வெர்ஷன் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட எஞ்சின் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை 2024 ஜூபிடர் பெற்றுள்ளது. இதில் சில அம்சங்கள் இதன் செக்மென்ட்டில் முதல் முறையாக இந்த ஸ்கூட்டரில் தான் அறிமுகம் செய்யப்பட்டவையாக உள்ளன. இங்கே 2024 TVS Jupiter 110-க்கும், பழைய ஜூபிடர் மாடலுக்கும் உள்ள சில முக்கிய வேறுபாடுகளை பார்க்கலாம். 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 vs பழைய ஜூபிடர்: டிசைன்… புதிய 2024 TVS Jupiter 110 வடிவமைப்பில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய ஜூபிடர் மாடலில் ஹெட்லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களின் அடிப்படையில் வழக்கமான வடிவமைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூபிடரின் புதிய வெர்ஷனில் டிஆர்எல் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்ஸ் அடங்கிய ஸ்லிக் எல்இடி பார் (LED bar) உள்ளது. அதேபோல் ஒட்டுமொத்த வடிவமைப்பை புதிய கலர் ஆப்ஷன்கள் மூலம் நிறுவனம் மெருகூட்டி உள்ளது. ஸ்கூட்டரின் ஃப்ளோர்போர்டில் ஃப்யூயல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்கூட்டரை சிறப்பாக கையாள சீட்டிற்கு அடியில் போதுமான அளவு இடத்தை நிறுவனம் கொடுத்துள்ளது. இதையும் படிக்க: Black cars: கருப்பு நிற கார்கள் வாங்குவதை தவிர்ப்பதற்கான 6 காரணங்கள்… ஏன் தெரியுமா? 2024 டிவிஎஸ் ஜூபிடர் vs பழைய ஜூபிடர்: அம்சங்கள்… TVS நிறுவனத்தின் 2024 ஜூபிடர் 110 ஸ்கூட்டரானது ஃபோன் கனெக்டிவிட்டியுடன் கூடிய LCD டேஷ்போர்ட், நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் கமென்ட் உள்ளிட்ட அம்சங்களைப் பெறுகிறது. வாய்ஸ் கமென்ட் ஆப்ஷனை ஸ்டார்டர் பட்டனிலேயே ஆக்டிவேட் செய்ய முடியும், அதே சமயம் டர்ன் சிக்னல் சுவிட்சை நீண்ட நேரம் அழுத்தினால் hazard லைட்ஸ் ஆக்டிவேட் ஆகும். அதே போல ஃப்யூயல் டேங்க் முன்பக்கத்தில் இருப்பதால், பெட்ரோல் போடும்போது ஸ்கூட்டரை விட்டு ரைடர் இறங்க வேண்டியதில்லை. பின்புறத்தில், இந்த ஸ்கூட்டர் 33-லிட்டர் பூட் ஸ்பேஸைப் பெறுகிறது. அதே நேரம் ஸ்கூட்டரின் ஃப்ரன்ட் ஏப்ரான் (front apron) ஒரு சிறிய க்யூபி ஹோலை பெறுகிறது, இதனை பயன்படுத்தி ஃபோனை வைத்து, ஸ்கூட்டரில் உள்ள USB சார்ஜரைப் பயன்படுத்தி அதை சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் எமர்ஜென்சி ஸ்டாப் வசதி உள்ளது, இது ஹார்ட் பிரேக்கிங்கின் கீழ் hazard லைட்ஸ்களை ஒளிரச் செய்யும். இதையும் படிக்க: புது கார் வாங்க இது சரியான நேரமா..? பண்டிகை கால ஆஃபர்களை தெரிஞ்சிக்கோங்க! 2024 டிவிஎஸ் ஜூபிடர் vs பழைய ஜூபிடர்: எஞ்சின் ஸ்பெசிஃபிகேஷன்கள்… புதிய ஜூபிடரின் எஞ்சின் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதிலிருக்கும் எஞ்சின் கேசிங்கில் லைட்டான மெடீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஜூபிடர் சற்று பெரிய 113சிசி எஞ்சினைப் பெறுகிறது, இது 8bhp பவர் மற்றும் 9.2Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது 10% எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் நவீன கார்களைப் போன்ற IGO அசிஸ்ட் சிஸ்டமையும் கொண்டுள்ளது. ஹைப்ரிட் iGo அசிஸ்ட் 9.8Nm பீக்டார்க்கை உருவாக்குகிறது. பழைய ஜூபிடர் 7.6 bhp பவர் மற்றும் 8.8Nm பீக் டார்க்கை உருவாக்கும் 109 cc எஞ்சினைக் கொண்டுள்ளது. பழைய மற்றும் புதிய ஜூபிடர் மாடல்களில் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனே கொடுக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.