AUTOMOBILE

வெளியானது ஹோண்டா எலிவேட் Apex எடிஷன்... விலை விவரம்!

நாட்டில் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில் ஹோண்டா கார் இந்தியா லிமிட்டட் நிறுவனம் இந்தியாவில் தனது பிரபலமான எஸ்யூவி மாடலாக இருக்கும் எலிவேட்-ன் ஸ்பெஷல் அபெக்ஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த Apex எடிஷன் வழக்கமான Elevate எஸ்யூவி-யில் இருந்து வேறுபடுத்தும் வகையில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை பெறுகிறது. இந்த லிமிட்டட்-டைம் அக்சஸரீ பேக்கேஜ் மிட்-ரேஞ்ச் V மற்றும் VX டிரிம்ஸ்களில் கிடைக்கிறது மற்றும் அற்புதமான காஸ்மெட்டிக் அப்கிரேட்ஸ்களை வழங்குகிறது. Apex எடிஷன் வழக்கமான டிரிம்ஸ்களை விட ரூ.15,000 கூடுதல் விலையில் வருகிறது. டிசைன்: புதிய அபெக்ஸ் எடிஷனானது பியானோ பிளாக் கார்னிஷஸ் மற்றும் ஃப்ரன்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ்களில் சில்வர் அக்ஸன்ட்ஸ் மற்றும் புதிய டோர் கார்னிஷுடன் கூடிய பிரீமியம் டச்சை சேர்க்கிறது. மேலும் புதிய, பிரத்யேக தோற்றத்திற்காக, ஃப்ரன்ட் ஃபென்டர் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் அபெக்ஸ் எடிஷன் பேட்ஜ்களையும் பார்க்க முடிகிறது. அம்சங்கள்: அபெக்ஸ் எடிஷன் டூயல்-டோன் ஐவரி மற்றும் ஸ்டாண்டர்ட் எலிவேட்டில் காணப்படும் டான்-பிளாக் காம்போவிற்கு மாற்றாக பிளாக் இன்டீரியரை கொண்டுள்ளது. இது டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் லெதரெட் டிரிம்ஸ்களை கொண்டுள்ளது. சீட் அப்ஹோல்டரி, குஷன்ஸ் மற்றும் ambient lighting உள்ளிட்டவை Apex எடிஷனுக்கு ஆடம்பரத்திற்கு சேர்க்கின்றன. வாடிக்கையாளர்கள் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் பேக்கேஜ்களை தனித்தனியாக தேர்வு செய்யலாம். இன்டீரியர் பேக்கேஜின் விலை ரூ.10,000, எக்ஸ்டீரியர் பேக்கேஜ் விலை ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஞ்சின் ஸ்பெசிஃபிகேஷன்கள்: எஞ்சின் ரீதியாக, எலிவேட் மாறாமல் உள்ளது. இது 121hp, 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தொடர்ந்து இயங்குகிறது, இது 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 7-ஸ்டெப் CVT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. ஹோண்டா எலிவேட் அபெக்ஸ் எடிஷனின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்: - V MT: ரூ.12.86 லட்சம் (ஸ்டாண்டர்ட்: ரூ.12.71 லட்சம்) - V CVT: ரூ.13.86 லட்சம் (ஸ்டாண்டர்ட்: ரூ.13.71 லட்சம்) - VX MT: ரூ.14.25 லட்சம் (ஸ்டாண்டர்ட்: ரூ.14.10 லட்சம்) - VX CVT: ரூ.15.25 லட்சம் (ஸ்டாண்டர்ட்: ரூ.15.10 லட்சம்) Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! அதே போல் ஸ்டைலான மற்றும் அப்கிரேட்டட் ஹோண்டா எலிவேட்டை வாங்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இந்த லிமிட்டட் அபெக்ஸ் எடிஷன் சரியான தேர்வாக இருக்கும். இதனிடையே HCIL-ன் மார்கெட்டிக் மற்றும் சேல்ஸ் பிரிவின் துணைத் தலைவர் குணால் பெஹ்ல் அறிக்கை ஒன்றில், “எங்கள் வெற்றிக்கு எலிவேட் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. கவர்ச்சிகரமான விலையில் புதிய Apex எடிஷனைஅறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.