AUTOMOBILE

இந்திய ஆட்டோமொபைல் துறையை மாற்றிய இண்டிகா... வெற்றி கண்ட ரத்தன் டாடாவின் விடாமுயற்சி!

இந்திய வாகன துறையில் சமீபத்தில் மறைந்த ரத்தன் டாடாவின் முயற்சிகள் ஈடு இணையற்றவை. இவரது தொலைநோக்குப் பார்வைக்கும், தலைமைத்துவத்துக்கும் சான்றாக அவரது நிறுவன தயாரிப்பான டாடா இன்டிகா நிற்கிறது. இந்த வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, உள்நாட்டு பொறியியல் மற்றும் வடிவமைப்பின் திறனை வெளிப்படுத்தி இந்திய கார் துறையிலும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. கடந்த 1937ஆம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் பங்களிப்புகள் டாடா குரூப்பை ஒரு உலகளாவிய நிறுவனமாக மாற்றியது. இவரது சிறப்பான தொழில் வாழ்வில் இண்டிகாவின் அறிமுகம் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாடலுக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு மிக முக்கியமான ஒரு தருணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா இண்டிகா, வாகனத் துறையில் ரத்தன் டாடாவின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும். ஏனென்றால் இந்த காலக்கட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்கொண்டது. இந்த மாற்றங்கள் புதுமைக்கான கதவுகளை திறந்ததோடு, ரத்தன் டாடா இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்கும் ஒரு காரை அறிமுகம் செய்வது குறித்த முயற்சிகளை முன்னெடுக்க அவரை அனுமதித்தது. தரம் மற்றும் செயல்திறனில் சமரசம் செய்யாமல் அதே சமயம் மலிவு விலையில் ஒரு காரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு 1991ல் ரத்தன் டாடா திட்டம் ஒன்றை தொடங்கினார். சர்வதேச பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தநிலையில், அவரது திட்டத்திற்கு பெரும் சவால்கள் இல்லாமல் இல்லை. பல சவால்கள் இருந்தபோதிலும், ரத்தன் டாடாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் தொடர்ந்து முன்னேறியது. ரத்தன் டாடாவின் லட்சியத்தை அடைய பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் குழு அர்ப்பணிப்புடன் இடைவிடாமல் உழைத்தது. வாடிக்கையாளர் விருப்பங்களைப் புரிந்து கொள்வது, ஓட்டுநர் நிலைமைகள் மற்றும் சந்தை இடைவெளிகளைக் கண்டறிவதில் இந்த குழு அதிக கவனம் செலுத்தியது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகாவை அறிமுகப்படுத்தியபோது அவர்களின் கடின உழைப்பு வீண் போகாமல் பலனளித்தது. மலிவு விலையில் விசாலமான மற்றும் எரிபொருள் திறன் கொண்ட வாகனமாக அறிமுகமான இண்டிகா, வெகு சீக்கிரமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானது. சுருக்கமாக சொன்னால் இண்டிகாவின் வெற்றி டாடா மோட்டார்ஸ் மற்றும் இந்திய வாகனத் துறைக்கு ஒரு கேம் சேஞ்சராக இருந்தது. இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத காரை தனக்காக வைத்திருந்த ரத்தன் டாடா..!! இன்னும் சொன்னால் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டு பிராண்டுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய உற்பத்தி மற்றும் பொறியியலின் திறன்களை இண்டிகா நிரூபித்தது. தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இருப்பை விரிவுபடுத்த இண்டிகாவின் புகழ் உதவியது. பல ஆண்டுகளாக நிறுவனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்திய பல மாடல்களை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல வருடங்களாக எண்ணற்ற மாடல்களை அறிமுகப்படுத்தி, நிறுவனத்தின் நற்பெயரை தொடர்ந்து உறுதிபடுத்தியுள்ளது. பில்ட் குவாலிட்டி மற்றும் செயல்திறன் குறித்து ஆரம்பத்தில் இண்டிகா மாடல் பல சந்தேகங்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறியது. டாடா இண்டிகா ஒரு கார் என்பதை விட தேசிய பெருமையின் சின்னமாகவும், இந்திய வாகன சந்தையை மறுவரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது. இதையும் படிக்க: லிட்டருக்கு 30-கிமீ மைலேஜ் தரும் 6 CNG கார்களின் பட்டியல்..! நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், தேசத்தை முன்னோக்கி இட்டுச் செல்லும் தீர்வுகளை வழங்குவதற்கான ரத்தன் டாடாவின் திறனை, டாடா இண்டிகா எடுத்துக்காட்டுகிறது. இண்டிகாவின் வெற்றிக் கதை, தங்களது லட்சியத்தை அடைய விரும்புவோர் விடா முயற்சியுடன் என்ன தேவை என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதை நமக்கு காட்டுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.