AUTOMOBILE

ஸ்விஃப்ட் மாடலுக்கு மாபெரும் சலுகையை அறிவித்த மாருதி சுசுகி..!

மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் மாடலை (நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்) அறிமுகப்படுத்தியது. முந்தைய Swift மாடல்களைப் போலவே 2024 மாடலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அறிமுகமானதில் இருந்து நல்ல அளவிலான விற்பனை எண்ணிக்கையை 2024 Maruti Swift எட்டியுள்ளது. வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கும் வகையில் இப்போது மாருதி சுசுகி ​​​​நிறுவனம் இந்த புதிய மாடலுக்கு நல்ல தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் புதிய ஸ்விஃப்ட் மாடல் முன்பை விட இப்போது இன்னும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் தற்போது புதிய ஸ்விஃப்ட்டின் ஆட்டோமேட்டிக் டிரிம்களில் ரூ.33,100 மற்றும் மேனுவல் டிரிம்களில் ரூ.28,100 தள்ளுபடி வழங்கி வருகிறது. எனவே புதிய மாடல் Swift வாங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்கு சென்று இந்த தள்ளுபடி பலன்களைப் பெறலாம். கடந்த மாதம் அளிக்கப்பட்ட தள்ளுபடி விவரங்கள்: மாருதி சுசுகி நிறுவனம் 2024 ஸ்விஃப்ட் மாடலை தள்ளுபடி விலையில் விற்பது இது முதல்முறை அல்ல. கடந்த மாதம், தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஸ்விஃப்ட் வேரியன்ட்டிற்கு ரூ.15,000 தள்ளுபடி வழங்கியது. இந்த பிரிவில் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை Swift-க்கான ஆஃபர்கள்: 2024 மாடல் swift-க்கான ஆஃபர் தவிர மாருதி சுசுகி நிறுவனம் இந்த மாடலின் முந்தைய தலைமுறை கார்களுக்கும் தள்ளுபடி வழங்கி வருகிறது. முந்தைய தலைமுறை Swift-ன் பெட்ரோல் வேரியன்ட்ஸ்களுக்கு ரூ.28,100 வரையிலும், அதே நேரத்தில் CNG வெர்ஷனுக்கு ரூ.18,100 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பழைய ஸ்டாக்ஸ்கள் தீரும் வரை இந்த தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிகிறது. இதையும் படிக்க: பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் 650 vs ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650: இன்ஜின், அம்சங்கள் மற்றும் விலை! செடான் மற்றும் ஹேட்ச்பேக் விற்பனையில் சரிவு: இந்திய வெஹிகிள் மார்க்கெட்டில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப SUV-க்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் ஹேட்ச்பேக் மற்றும் செடான் விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 2023 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​ஜூலை 2024-ல் ஹேட்ச்பேக் விற்பனை கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது. அதேபோல செடான் செக்மென்ட் விற்பனையில் சுமார் 22% சரிவை சந்தித்துள்ளது. இதையும் படிக்க: காரில் ஏசி போட்டால் மைலேஜ் குறையுமா? - ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும்? அதே நேரம் ஜூலை 2024-ல், SUV விற்பனை சுமார் 7% அதிகரித்துள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி-க்கள் பல வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட கால்வாசி கார்கள் 4 மீட்டர் SUV வகையை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.