AUTOMOBILE

எலக்ட்ரிக் பைக் வாங்க திட்டமா... அப்போ ஓலா அறிவித்துள்ள அதிரடி ஆஃபரை தெரிஞ்சுக்கோங்க!

பிரபல உள்நாட்டு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், அதன் S1 ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரிய அளவிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Ola S1X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999-ஆக இருக்கும் நிலையில், ரூ.35,000 விலை குறைத்து விற்கவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியுடன் தற்போது Ola S1X-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.49,999-ஆக உள்ளது. இருப்பினும் ஸ்டாக்ஸ் இருக்கும் வரை மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக Ola S1 ரேஞ்சில் உள்ள மற்ற மாடல்களுக்கு ரூ.10,000 வரையிலான தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வழங்கும் ரூ.21,000 மதிப்பிலான கூடுதல் நன்மைகளில் ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.6,000 மதிப்புள்ள 140-க்கும் மேற்பட்ட MoveOS அம்சங்கள், ரூ.7,000 மதிப்பிலான எட்டு வருட பேட்டரி உத்தரவாதம் மற்றும் ரூ.3,000 மதிப்புள்ள ஹைப்பர்சார்ஜிங் கிரெடிட் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். இது எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு மெகா ஆஃபராக இருக்கும். இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸின் புதிய கார் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா? மேற்கண்ட இந்த சலுகைகளுடன் ஓலா வாடிக்கையாளர்களுக்கு ரெஃப்ரல் போனஸையும் ஓலா வழங்குகிறது. ஒரு ரெஃப்ரலுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.3,000 வரை தள்ளுபடி பெறலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 23,965 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசின் வாஹன் போர்ட்டல் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது மாதமாக month-on-month விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. இதனிடையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் 18,933 e-Chetak ஸ்கூட்டர்களை விற்றது, அதே நேரம் TVS அதன் iQube-ன் 17,865 யூனிட்ஸ்களை விற்பனை செய்து உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த விற்பனை எண்களின் அடிப்படையில், பஜாஜ் ஆட்டோ இப்போது நாட்டின் நம்பர் 2 இ-ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. அதே நேரம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 52,000 யூனிட்ஸ்களை விற்ற ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.