AUTOMOBILE

பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. டிவிஎஸ் ரோனின் பேஸ் வேரியண்ட் விலை அதிரடி குறைப்பு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பண்டிகைக் காலத்தில் அதன் விற்பனையை அதிகரிக்க டிவிஎஸ் ரோனின் பேஸ் வேரியண்ட் விலையைக் குறைத்துள்ளது. இது தவிர டிவிஎஸ் நிறுவனம் டாப் வேரியண்டில் மிட்நைட் ப்ளூ வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய வண்ணமானது, பைக்கிற்கு புதிய லுக்கை தருகிறது. பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, நிறுவனம் இந்த புதிய வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நிறத்துடன், இந்த பைக் இன்னும் கவர்ச்சிகரமானதாகவும், இளம் தலைமுறையினரின் தேர்வாகவும் மாறும். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் புதிய மற்றும் ஸ்டைலான பைக்கை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். என்ட்ரி லெவல் வேரியண்ட்டான டிவிஎஸ் ரோனின் SS, இப்போது ரூ.1.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. முன்னதாக ரூ.1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்த பேஸ் வேரியண்ட்டின் விலையை தற்போது ரூ.14,000 ஆக குறைத்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை, SS, DS, TD மற்றும் TD ஸ்பெஷன் எடிஷன் போன்ற 4 வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது. வேரியண்ட் வாரியாக டிவிஎஸ் ரோனின் (எக்ஸ்-ஷோரூம்) விலைகளை பற்றி பார்ப்போம்: டிவிஎஸ் ரோனின் SS - ரூ 1.35 லட்சம் டிவிஎஸ் ரோனின் DS - ரூ 1.57 லட்சம் டிவிஎஸ் ரோனின் TD - ரூ 1.69 லட்சம் டிவிஎஸ் ரோனின் TD சிறப்பு பதிப்பு - ரூ 1.73 லட்சம் டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிள் ஆனது 225.9சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின், 4-ஸ்ட்ரோக், 4-வால்வு, SOHC இன்ஜின் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.4PS பவரையும் மற்றும் 19.93Nm பீக் டார்க்கையும் வழங்குகிறது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் ஆனது சிறந்த செயல்திறன் மற்றும் மென்மையான சவாரி அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இந்த இன்ஜின் ஆனது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பைக்கின் ஓட்டும் தரத்தை இன்னும் மேம்படுத்துகிறது. டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிளில் முன் பக்கத்தில் USD டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின் பக்கத்தில் 7-ஸ்டேப் அட்ஜஸ்ட்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், ஃபிரன்ட்டில் 300mm டிஸ்க் மற்றும் பேக்-ல் 240mm டிஸ்க் பிரேக்குடன் கூடிய டூயல் சேனல் ABS, டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய 17-இன்ச் அலாய் வீல்கள் உடன் வருகிறது. இது, T வடிவ DRL-உடன் கூடிய LED லைட்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கிறது. டிவிஎஸ் ரோனின் நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 உடன் போட்டியிடுகிறது. இரண்டு பைக்குகளும் அந்தந்த பிரிவுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலையானது ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.