AUTOMOBILE

EV வாங்குபவர்களுக்கு விரைவில் இ-வவுச்சர்கள்... அறிமுகப்படுத்த உள்ள மத்திய அரசு!

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) பெருமளவில் புழக்கத்தில் கொண்டு வருவதற்கு போதுமான சார்ஜிங் இன்ஃப்ராஸ்ட்ரெக்ச்சரை இந்தியா உறுதி செய்யும் என்று சமீபத்தில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச் டி குமாரசாமி தெரிவித்துள்ளார். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட PM e-Drive (PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement) திட்டத்தின் கீழ சலுகைகளை பெற, மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் விரைவில் இ-வவுச்சர்களை அறிமுகப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். சமீபத்தில் நடைபெற்ற FICCI மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கருத்தரங்கில் பங்கேற்று “இந்தியாவின் EV போக்குவரத்தை உறுதி செய்வதில் FAME-ன் வெற்றி’ என்ற தலைப்பில் பேசிய குமாரசாமி, நாட்டில் EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த அரசி உறுதியாக இருப்பதை சுட்டி காட்டினார். “சார்ஜிங் உள்கட்டமைப்பை அரசு விரைவாக விரிவுபடுத்தி வருகிறது. FAME-II திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,763 பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இ- வவுச்சர்களின் அறிமுகம் EV அடாப்ஷனை ஊக்குவிப்பதில் அரசின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. இது இந்த புதிய திட்டத்தின் தனித்துவ அம்சமாகும், இதற்கான வழிமுறைகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. விரைவில் இது குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்துவது, போட்டி இருந்தாலும் நெகிழ்ச்சியான மின்சார வாகன உற்பத்தித் தொழில் சூழலை உருவாக்குவது அரசின் குறிக்கோள் என்று குமாரசாமி கூறினார். முன்னதாக PM E-DRIVE திட்டம் கடந்த வாரம் மத்திய அமைச்சரவையால் வெளியிடப்பட்டது. கணிசமான முன்கூட்டிய சலுகைகள் மற்றும் நாட்டில் முக்கியமாக சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் EV பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிப்பது மற்றும் விரைவுபடுத்துவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. புதிய PM E-DRIVE திட்டமானது, இ-ஆம்புலன்ஸ்களுக்கு ரூ.500 கோடி பிரத்யேக நிதி, எலெக்ட்ரிக் லாரிகளை அடாப்ஷன் செய்வதை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு உட்பட பல புதுமையான விஷயங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் இ-பஸ்களுக்கு 22,000 ஃபாஸ்ட் சார்ஜர்கள், இ-பஸ்களுக்கு 1,800 மற்றும் இ-டூ-வீலர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 48,400 ஃபாஸ்ட் சார்ஜர்களை நாடு முழுவதும் இன்ஸ்டால் செய்ய ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடும் அடங்கும். Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! FAME-2 வெற்றி பற்றி பேசிய குமாரசாமி ஒதுக்கப்பட்ட ரூ.11,500 கோடியில் 92 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இத்திட்டம் பொது போக்குவரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது, ஜூலை 31, 2024 நிலவரப்படி 6,862 இ-பஸ்களில் 4,853 இ-பஸ்கள் குறிப்பிட்ட நகரங்களுக்குள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன என்றார். FAME-II திட்டத்தின் கீழ் ஏற்கனவே 92 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை எட்டியுள்ளதாக கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனிஃப் குரேஷி தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.