AUTOMOBILE

Monsoon Driving Tips | மழைக்காலத்தில் பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? - அவசியம் இதையெல்லாம் பாலோ பண்ணுங்க!

பொதுவாக மழைக்காலங்களில் கார் ஓட்டும்போது நம்முடைய பாதுகாப்பு கருதி நாம் கூடுதல் எச்சரிக்கையை பின்பற்ற வேண்டும். அதிலும் இந்திய சாலைகளில் குறிப்பாக மழைக்காலங்களில் கார் ஓட்டுவது என்பது சவாலான காரியமாகவே அமைகிறது. வழுக்கும் சாலைகள் மற்றும் மழையின் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத சூழ்நிலை போன்ற எக்கச்சக்கமான சவால்கள் காரணமாக மழைக்காலத்தில் கார் ஓட்டுவது மிகவும் கடினமானதாக அமைகிறது. எனவே இது மாதிரியான ஈரப்பதமான சாலைகளில் கார் ஓட்டும்போது நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். இவற்றை பின்பற்றுவது உங்களுடைய பாதுகாப்பை மட்டும் அல்லாமல், சாலையில் பயணிக்கும் பிறரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு உதவுகிறது. மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவும் சில குறிப்புகள்: கடுமையாக மழை பெய்தாலும் எதிரே உள்ள விஷயங்களை தெளிவாக பார்ப்பதை உறுதி செய்வதற்கு பழைய அல்லது சேதமடைந்த வைஃப்பர் பிளேடுகளை மாற்றுங்கள். ஹெட்லைட், டெய்ல் லைட், பிரேக் லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் போன்ற அனைத்து லைட்டுகளும் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை கவனித்து, தேவைப்பட்டால் அவற்றை மாற்றவும். வின்டு ஷீல்ட் மற்றும் ஜன்னல்களில் பனி படிவதை தவிர்ப்பதற்கு டி-ஃபாகர்கள் மற்றும் ஏர் கன்டிஷனிங் பயன்படுத்தவும். ஈரமான சாலைகளில் டயர்கள் வழுக்காமல் உறுதியாக பயணிப்பதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் வாகனத்தின் டயர் சரியான நிலையில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். டயரின் அழுத்தத்தை சரிபார்த்து தேவைப்பட்டால் அதனை நிரப்பவும். டயர்கள் மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை மாற்றி விடுங்கள். இதையும் படிக்க: லிட்டருக்கு 30-கிமீ மைலேஜ் தரும் 6 CNG கார்களின் பட்டியல்..! வாகனத்தின் பிரேக்குகள் சரியான முறையில் இயங்குவதை உறுதிப்படுத்துவது அவசியம். ஏனெனில் ஈரமான நிலையானது காரின் பிரேக்கிங் செயல்திறனை பாதிக்கக்கூடும். திடீரென்று பிரேக் போடுவதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். காரை அதிவேகமாக ஓட்ட வேண்டாம். வாகனத்தின் கட்டுப்பாட்டை உங்கள் கையில் வைத்துக் கொள்வதற்கு காரை குறைந்த வேகத்தில் ஓட்டுவதே புத்திசாலித்தனம். இதனால் சாலையின் நிலைகளுக்கு ரியாக்ட் செய்வதற்கு உங்களுக்கும், பின்னால் வரும் வாகனங்களுக்கும் போதுமான நேரம் கிடைக்கும். தண்ணீர் நிரம்பி வழியும் சாலைகளில் பயணிப்பதையும், பெரிய பெரிய குழிகளில் காரை விட்டு ஏற்றுவதையும் தவிர்க்கவும். ஏனெனில், இதனால் காரின் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களில் தண்ணீர் புகுந்து அதனால் சேதங்கள் ஏற்படலாம். இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத காரை தனக்காக வைத்திருந்த ரத்தன் டாடா..!! காரின் லைட்டுகள், வைப்பர்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றை மழைக்காலத்தில் அதிகப்படியாக பயன்படுத்த வேண்டும் என்பதால் காரின் பேட்டரி சிறந்த நிலையில் இருப்பதை சரிபார்த்துக் கொள்ளவும். கனமழையின்போது முடிந்த அளவு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். ஏனெனில் கனமழை சமயத்தில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் சாலை நிலைகள் உங்களுக்கு தெளிவாக தெரியாமல் போவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம். இந்த முன்னெச்சரிக்கை குறிப்புகளை பின்பற்றி உங்களுடைய மழைக்கால பயணத்தை சிறப்பானதாக மாற்றுங்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.