AUTOMOBILE

டாடா மோட்டார்ஸின் புதிய கார் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதனுடைய பிரபல மாடலான நெக்ஸானின் iCNG வெர்ஷனை ரூ.8.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Nexon iCNG என்பது இந்தியாவின் முதல் டர்போசார்ஜ்ட் CNG பயணிகள் வாகனம் (PV) ஆகும். மேலும் இது மாருதி நிறுவனத்தின் சுசுகி பிரெஸ்ஸா S-CNG-க்கு போட்டியாக இருக்கும். iCNG வெர்ஷன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Nexon மாடல் இப்போது பெட்ரோல், டீசல், CNG மற்றும் எலெக்ட்ரிக் உள்ளிட்ட வெர்ஷன்களில் கிடைக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7,00,000 யூனிட்ஸ்கள் என்ற விற்பனை மைல்கல்லை கடந்தது. முந்தைய மூன்று நிதியாண்டுகளில் மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா, ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா, கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ போன்ற மாடல்களை முறியடித்து இந்தியாவில் அதிகம் விற்பனையான SUV-ஆக டாடா நெக்ஸான் உள்ளது. FY22-ல் 1,24,130 யூனிட்ஸ்கள், FY23-ல் 1,72,139 யூனிட்ஸ்கள் மற்றும் FY24-ல் 1,71,697 யூனிட்ஸ்கள் நெக்ஸான் மாடல் விற்பனையாகின. இதையும் படிக்க: பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. டிவிஎஸ் ரோனின் பேஸ் வேரியண்ட் விலை அதிரடி குறைப்பு! இதனிடையே புதிய டாடா நெக்ஸான் iCNG மாடலில் 100PS பவர் மற்றும் 170Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் டர்போ பை-ஃப்யூயல் (பெட்ரோல் மற்றும் CNG) எஞ்சினை கொண்டுள்ளது. தற்போது மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் எதிர்காலத்தில் இந்த மாடல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறலாம். இந்த மாடலில் 60-லிட்டர் CNG டேங்க் உள்ளது, அதே நேரத்தில் இது 24km/kg மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது. வேரியன்ட் வாரியாக புதிய Nexon iCNG-ன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே: ஸ்மார்ட் - ரூ 8.99 லட்சம் ஸ்மார்ட்+ - ரூ 9.69 லட்சம் ஸ்மார்ட்+ எஸ் - ரூ 9.99 லட்சம் பியூர் - ரூ 10.69 லட்சம் பியூர் எஸ் - ரூ 10.99 லட்சம் கிரியேட்டிவ் - ரூ 11.69 லட்சம் கிரியேட்டிவ்+ - ரூ 12.19 லட்சம் ஃபியர்லஸ் + PS - ரூ 14.59 லட்சம் டாடாவின் புதிய Nexon iCNG மாடலானது பனோரமிக் சன்ரூஃப், லெதரெட் வென்டிலேட்டட் சீட்ஸ் மற்றும் ஹர்மன் நிறுவனத்தின் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25-இன்ச் ஃபுல் -டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. டூயல்- சிலிண்டர் தொழில்நுட்பத்துடன், இந்த வாகனம் 321 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் ஒரு 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற வாகனமாகும். இது லீக் டிடெக்ஷன், ஃபயர் ப்ரொட்டக்ஷன் டிவைஸ், தெர்மல் இன்ஸிடன்ட் ப்ரொட்டக்ஷன் மற்றும் ரியர் இம்பேக்ட் ப்ரொட்டக்ஷன் போன்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.