AUTOMOBILE

100 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த ஹூண்டாய் நிறுவனம்!

தென் கொரியாவைச் சேர்ந்த முக்கிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உலகளாவிய ஒட்டுமொத்த கார் உற்பத்தியில் 100 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து 57 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. உலகளாவிய வாகனத் துறையில் வேறு எந்த நிறுவனமும் இத்தனை வேகமாக சாதனை படைத்ததில்லை என்று கூறப்படுகிறது. உலகளவில் ஒட்டுமொத்தமாக 100 மில்லியன் வாகனங்களின் உற்பத்தியை எட்டுவது சாதாரண விஷயமல்ல. இது பாராட்டத்தக்க மைல்கல் ஆகும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சமயத்தில் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தான் ஆரம்பத்திலிருந்தே ஹூண்டாய் மோட்டாரைத் தேர்ந்தெடுத்து ஆதரித்து வருகிறார்கள்" என்று ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜேஹூன் சாங் கூறியுள்ளார். “தைரியமாக சவால்களை ஏற்றுக்கொள்வது மற்றும் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவது ஆகியவை விரைவான வளர்ச்சியை அடைய எங்களுக்கு உதவியது. நிச்சயம் இது மற்றொரு 100 மில்லியன் யூனிட்களை நோக்கி ‘ஒரு படி மேலே’ செல்ல எங்களுக்கு உற்சகத்தை அளிக்கும்” என்றும் ஜேஹூன் கூறியுள்ளார். உல்சான் ஆலை 1968-ல் செயல்படத் தொடங்கியது. இந்த ஆலை ‘கொரிய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியின் பிறப்பிடமாக’ குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆலை 1975-ல் கொரியாவின் முதன் முதலாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலான போனி (Pony) காரை தயாரித்தது. தற்போது இந்த ஆலை மின்மயமாக்கலுக்கான மையமாக உள்ளது. அதுமட்டுமின்றி ஹூண்டாய் நிறுவனம் இந்த இடத்தில் ஒரு பிரத்யேக மின் வாகன (EV) உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இதையும் படிக்க: புது கார் வாங்க இது சரியான நேரமா..? பண்டிகை கால ஆஃபர்களை தெரிஞ்சிக்கோங்க! ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ததில் பங்களித்துள்ளனர் என்று ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்தித் தலைவர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி டாங் சியோக் லீ கூறினார். இது ஹூண்டாய் மோட்டார் முன் நடத்தி செல்லும் எதிர்கால மின்மயமாக்கல் சகாப்தத்தை நோக்கிய முதல் படியாகும். இந்த வரலாற்று சாதனையில் உந்துதல் பெற்ற ஹூண்டாய் நிறுவனம், பிரீமியம் பிராண்டான ஜெனிசிஸ் (Genesis), உயர் செயல்திறன் கொண்ட பிராண்ட் N (brand N ) மற்றும் பிரத்யேக எலக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (E-GMP) அடிப்படையிலான லோனிக் 5 போன்ற எலக்ட்ரிக் கார்ளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் உலகளவில் துருக்கி, இந்தியா, அமெரிக்கா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் உற்பத்தி வசதிகளுடன் விரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.