AUTOMOBILE

2024ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த இன்ஃப்லைட் என்டர்டெயின்மென்ட் விருதை வென்ற ஏர் இந்தியா!!

டாடா குழுமத்தின் மற்றும் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா, சமீபத்தில் மணிலாவில் நடைபெற்ற 31ஆவது ஆண்டு உலக பயண விருதுகளில் (WTA - World Travel Awards), ஆசியாவின் முன்னணி ஏர்லைன் இன்ஃப்லைட் என்டர்டெயின்மென்ட் 2024 (Leading Airline Inflight Entertainment 2024) விருதை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விருதை வென்றதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனமானது விமான பயண பொழுதுபோக்குக்காக அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக விமான குழுவில் சேர்கிறது. இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று இந்த விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஒரு அற்புதமான சாதனையாக பார்க்கப்படுகிறது. ட்ராவல் இன்டஸ்ட்ரியின் ஆஸ்கர் விருதுகளாக கருதப்படும் World Travel Awards நிகழ்வில் வழங்கப்படும் விருதுகள் உலகளாவிய பயணம் மற்றும் சுற்றுலாவின் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா பேசுகையில், இந்த விருது தங்களது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விமானப் பயண அனுபவத்தை நாங்கள் வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பதற்கு இந்த விருது ஒரு சான்றாகும்” எனவும் கூறியுள்ளார். இந்த விருது ஏர் இந்தியாவால் க்யூரேட் செய்யப்பட்ட இன்ஃப்ளைட் என்டர்டெயின்மென்ட் (IFE) உள்ளடக்கத்தின் முழு தொகுப்பையும் அங்கீகரிக்கிறது மற்றும் தற்போது டெல்லி-ஹீத்ரோ வழித்தடத்தில் இயக்கப்படும் ஏர்பஸ் ஏ350 விமானங்களில் இது கிடைக்கிறது மற்றும் வரும் நவம்பரில் நியூயார்க் (JFK)-க்கு இது தொடங்க உள்ளது. மேலும் இந்த IFE ஆஃபர் ஆர்டர் செய்யப்பட்ட 64 புதிய வைட்பாடி ஏர் கிராஃப்ட் , ரெட்ரோஃபிட்டிங்கிற்குப் பிறகு legacy ஏர்கிராஃப்ட்களிலும் இடம்பெறும். ஏர் இந்தியா சுமார் 3,000 மணிநேர பொழுதுபோக்கிற்கான ஒரு பெரிய லைப்ரரியை கொண்டுள்ளது. இதில் 1,400 மணி நேர திரைப்படங்கள், 850 மணி நேர டிவி ஷோக்கள் மற்றும் 1,000 மணி நேர ஆடியோ கன்டென்ட் அடக்கம். இதையும் படிக்க: லிட்டருக்கு 30-கிமீ மைலேஜ் தரும் 6 CNG கார்களின் பட்டியல்..! ஏர் இந்தியா இந்திய திரைப்படங்களின் மிகப்பெரிய லைப்ரரியைக் கொண்டுள்ளது, இதில் பல்வேறு வகைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. புதிய கன்டென்ட்டில் எட்டு மொழிகளில் 120 பிராந்திய திரைப்படங்கள் மற்றும் பிரபலமான வெப் சீரிஸ்கள் உள்ளன. சர்வதேச சினிமா ரசிகர்களுக்காக, ஏர் இந்தியா 300 ஹாலிவுட் திரைப்படங்களை வழங்குகிறது, இதில் BAFTA மற்றும் Oscars.a விருது பெற்றவைகளும் அடங்கும். நிறுவனத்தின் இன்ஃப்லைட் லைப்ரரியில் 13 மொழிகளில் திரைப்படங்கள் உள்ளன. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகளில் இருந்து விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 1400-க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளின் எபிசோடுகள் மற்றும் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களான பாரமவுண்ட்+ மற்றும் எச்பிஓ போன்றவற்றின் மூலம் பயணிகள் பல்வேறு வகையான பொழுதுபோக்குகளை அனுபவிக்க முடியும். இதையும் படிக்க: ஏதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.25,000 தள்ளுபடி.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிரடி ஆஃபர்..! ஏர் இந்தியா ரேடியோவில் RJ-க்களான மலிஷ்கா மென்டோன்சா மற்றும் ஜின்னி மகாஜன் ஆகியோர் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை வழங்குகிறார்கள். விரிவான மியூசிக் கலெக்ஷனில் பல்வேறு genres-களில் 1200-க்கும் மேற்பட்ட தேர்வுகள் உள்ளன. அதேபோல இளம் குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் டீனேஜ் குழந்தைகள் என அவரவர் வயதிற்கு ஏற்ப 100 மணி நேர உள்ளடக்கத்துடன் கூடிய பொழுதுபோக்குகளை நிறுவனம் வழங்குகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.