AUTOMOBILE

‘VolksFest 2024’: ரூ.2.30 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி வழங்கும் Volkswagen நிறுவனம்!

வோல்க்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India) நிறுவனமானது இந்தியாவில் VolksFest 2024 கஸ்டமர் ஈவன்ட்டை அறிவித்துள்ளது. இந்த ஈவன்ட்டில் நிறுவனம் அதன் புதிய கார்களுக்கு சில கணிசமான டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது. Volkswagen India நிறுவனமானது அதன் Virtus, Taigun மற்றும் பிரீமியம் Tiguan போன்ற மாடல்களில் ரூ.2.30 லட்சம் வரை பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த ஈவன்ட்டின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு சர்விஸ் பேக்கேஜஸ் மற்றும் ஆட்-ஆன் வாரண்டி போன்ற ஆட்-ஆன் சர்விஸ்களில் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் பெனிஃபிட்ஸ்கள் வழங்கப்படுகின்றன. VolksFest 2024 ஈவன்ட் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 31, 2024 வரை இருக்கும். Taigun மாடலுக்கு நிறுவனம் வழங்கும் டிஸ்கவுன்ட்ஸ்: இந்த காம்பாக்ட் SUV-யின் மாடலைப் பொறுத்து நிறுவனம் ரூ.2.30 லட்சம் வரை பெனிஃபிட்ஸ்களை நிறுவனம் வழங்குகிறது. என்ட்ரி லெவல் Taigun 1.0 டிஎஸ்ஐ கம்ஃபோர்ட்லைன் ரூ.10.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது வைக்கப்படுகிறது. இது வழக்கமான விலையான ரூ.11.70 லட்சத்தை விட (எக்ஸ்-ஷோரூம்) சுமார் ரூ.80,000 குறைவு ஆகும். இதற்கிடையில் டாப்லைன் Taigun 1.0 TSI ரூ.1.86 லட்சம் வரையிலான பலன்களுடன் விற்கப்படுகிறது. Taigun ஜிடி 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி (டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக்) ரூ.2.28 லட்சம் வரையிலான பெனிஃபிட்ஸ்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் GT Plus 1.5 TSI MT வேரியன்ட் ரூ.1.97 லட்சம் வரை பெனிஃபிட்ஸ்களை பெறும் நிலையில், GT Plus Chrome 1.5 TSI DSG மற்றும் GT Plus Sport 1.5 TSI DSG ஆகிய வேரியன்ட்ஸ்கள் முறையே ரூ.2.30 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பெனிஃபிட்ஸ்களுடன் விற்கப்படுகிறது. Virtus மாடலுக்கு நிறுவனம் வழங்கும் டிஸ்கவுன்ட்ஸ்: மேற்கண்ட Taigun-ஐ போலவே, Virtus மாடலின் என்ட்ரி வேரியன்ட்டான Comfortline 1.0 TSI மாடலுக்கான சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வேரியன்ட்டின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.90 லட்சமாக உள்ளது, இதன் அசல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.56 லட்சம் ஆகும். Virtus மாடலின் Highline 1.0 TSI MT வேரியன்ட் ரூ.1.30 லட்சம் வரையிலான பலன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் Highline 1.0 TSI AT மற்றும் Topline 1.0 TSI AT ஆகிய வேரியன்ட்ஸ்கள் முறையே ரூ.1.58 லட்சம் மற்றும் ரூ.1.37 லட்சம் வரையிலான பலன்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரம் GT Plus 1.5 TSI DSG வேரியன்ட்டானது ரூ.94,000 வரையிலான நன்மைகளுடன் விற்கப்படுகிறது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! Tiguan மாடலுக்கு நிறுவனம் வழங்கும் டிஸ்கவுன்ட்ஸ்: Tiguan மாடல் ரூ.2.25 லட்சம் வரையிலான பெனிஃபிட்ஸ்களுடன் விற்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் வரையிலான கேஷ் பெனிஃபிட்ஸ் மற்றும் ரூ.75,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட்ஸ்களும் அடங்கும். Corporate buyers கூடுதலாக ரூ.50,000 தள்ளுபடி பெறலாம். Tiguan மீதான தள்ளுபடி செப்டம்பர் 30, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறுகிறது. இதனிடையே நாடு முழுவதும் உள்ள முக்கிய மால்களில் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்ஸ்களை திறக்க போவதாகவும், சில இடங்களில் உரிமையாளர்களுக்கு இலவச பார்க்கிங் மற்றும் வாலட் சேவைகள் போன்ற சேவைகளை வழங்க உள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.