AUTOMOBILE

புதிய மாற்றங்களுடன் டிவிஎஸ் அபாச்சி RR 310 இந்தியாவில் லான்ச்... விலை என்ன தெரியுமா?

முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான டிவிஎஸ் அப்பாச்சி RR310 மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இது முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல மாற்றங்களுடன் வருகிறது. இந்த பைக்கின் ரேசிங் ரெட் நிறத்தின் விலை ரூ.2.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய பாம்பர் கிரே வேரியன்டின் விலை ரூ.2.97 லட்சமாகவும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ ஆகிய இரண்டு கிட்களும் வழங்கப்படுகின்றன. டைனமிக் கிட் வேண்டும் என்றால் அடிப்படை விலையுடன் ரூ.18,000 ஆகவும், டைனமிக் ப்ரோ கிட் வேண்டும் என்றால், அடிப்படை விலையுடன் ரூ.16,000 ஆகவும் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இந்த நிறங்களை தவிர, மூன்றாவதாக ரேஸ் ரெப்ளிகா நிறத்திலும் RR 310 மாடல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அந்த நிறம் வேண்டும் என்றால் அடிப்படை விலையுடன் கூடுதலாக ரூ.7,000 செலுத்த வேண்டியிருக்கும். 2024 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் ஆனது 38 பிஎச்பி பவரையும், 29 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதில் 312.2 cc சிங்கிள் சிலிண்டர், DOHC மோட்டார் உள்ளது. இது முன்பை விட அதிகம். பைக்கின் ஏர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது முன்பை விட 13 சதவீதம் அதிகம் ஆகும். மேலும், த்ரோட்டில் பாடி மற்றும் வால்யூமெட்ரிக் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, என்ஜினின் எடையும் குறைவாக உள்ளது. RTDSC கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், வீல் கன்ட்ரோல், கார்னரிங் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் லிஃப்ட் ஆஃப் கன்ட்ரோல், ஸ்லோப் டிபென்டென்ட் கன்ட்ரோல், பை-டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர், ரேஸ் டியூன்டு டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் கன்ட்ரோல் (TPMS), க்ரூஸ் கன்ட்ரோல், டிரான்ஸ்பெரன்ட் கிளட்ச் கவர், ஏரோடைனமிக் விங்லெட் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை வழங்கப்பட்டு இருக்கிறது, இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! ரேஸ் பைக் ஓட்டுபவர்களின் வசதிக்காக, டிவிஎஸ் சில கூடுதல் அம்சங்களை வழங்கியுள்ளது. இதுதவிர பை-டைரக்ஷனல் க்விக்ஷிப்டர் வசதியையும் புதிய RR 310 மாடலில் டிவிஎஸ் கொடுத்திருக்கிறது. இந்த வசதிகள் ஆனது பைக்கின் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பெரும்பாலான வசதிகள் பழைய RR 310ல் இருந்து அப்படியேப் பெறப்பட்டுள்ளன. வண்டியின் டிசைனிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.