AUTOMOBILE

புதிய 2024 டாடா நெக்ஸான் EV கார்... இதன் ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல மாடலான நெக்ஸான் ரேஞ்சை மேம்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட Nexon EV-யை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரம் 2024-ஆம் ஆண்டு Tata Nexon EV மாடலின் டாப் ஸ்பெக் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.99 லட்சமாக உள்ளது. தவிர வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த சீரிஸில் புதிய Red Dark வெர்ஷனை சேர்த்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிறுவனம் இந்த அப்டேட்டட் வெர்ஷனில் பிரிஸ்மாடிக் செல்கள் (prismatic cells) கொண்ட அதிக கெப்பாசிட்டியுடன் கூடிய 45kWh பேட்டரி பேக் கொடுத்து உள்ளது. இது சார்ஜிங் டைம், டிரைவிங் ரேஞ்ச் மற்றும் ஹை-வோல்டேஜ் சேஃப்டி ஆகியவற்றை மேம்படுத்துகிறது. புதிய மற்றும் இந்த லேட்டஸ்ட் Nexon-ஐ மூன்று வெவ்வேறு வேரியன்ட்ஸ்களில் வாங்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்கு செல்வதன் மூலமோ அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலமாகவோ 2024 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் வண்டிகளை புக்கிங் செய்யலாம். பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெர்ஷன் ஒரு பெரிய பேட்டரி பேக்-ஐ கொண்டிருப்பதால், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 489கிமீ தூரம் வரையிலான ரேஞ்சை வழங்கும். இது ARAI-கிளைய்ம்ட் ரேஞ்ச் ஆகும். சமீபத்திய மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய 45kwh பேட்டரி யூனிட், முந்தைய வெர்ஷனை விட சுமார் 15 சதவிகிதம் அதிக எனர்ஜி டென்சிட்டியுடன் வருகிறது என்றும், 10-80 சதவிகிதம் சார்ஜிங் மார்க்-ஆனது 56 நிமிடங்களில் இருந்து சுமார் 48 நிமிடங்களாகக் குறைந்துள்ளது என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. டிசைனில் மாற்றம் இல்லை: பேட்டரி யூனிட்டை அப்கிரேட் செய்திருப்பதை தவிர Tata Nexon EV -ல் நிறுவனம் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் என எதிலும் மாற்றங்களை செய்யவில்லை. புதிய வெர்ஷனானது, தற்போது விற்பனையில் உள்ள வெர்ஷனின் அதே ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டை கொண்டுள்ளது. இதில் வலுவான எல்இடி ஹெட்லைட் செட்டப் மற்றும் இரு முனைகளிலும் ட்ரெண்டிங் கனெக்டட் பார் ட்ரிப் உள்ளது. முக்கிய அம்சங்கள்: சில குறிப்பிடத்தக்க அம்சங்களில் மல்டி-ஃபங்க்ஷ்னல் இலுமினேட்டட் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் மல்டிபிள் சார்ஜிங் போர்ட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். டாப் டிரிம்ஸ் என்று பார்க்கும் போது அவற்றில் ஆட்டோமேட்டிக் பனோரமிக் சன்ரூஃப், கூடுதல் ஸ்டோரேஜிற்கான Frunk, வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ் , 7.2கிலோவாட் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், வண்டி டு வண்டி மற்றும் வண்டிகள்-டு-லோட் சார்ஜிங் செட்டப் போன்ற பிரபலமான அம்சங்கள் உள்ளன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.