AUTOMOBILE

Raider 125 பைக்கின் ட்ரம் பிரேக் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி உள்ள டிவிஎஸ் நிறுவனம்!

டிவிஎஸ் நிறுவனம் சிறப்பாக விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றான Raider 125 பைக்கின் ட்ரம் பிரேக் வெர்ஷனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கம்யூட்டர் மோட்டார் சைக்கிளின் புதிய ட்ரம் பிரேக் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,869 ஆகும். புதிய பேஸ் வேரியன்ட் அதன் முன் மற்றும் பின்பக்கங்களில் ட்ரம் பிரேக்ஸ்களை கொண்டுள்ளதோடு, இந்த பண்டிகைக் காலத்தில் புதிய போட்டியாளர்களுக்கு மத்தியில் சரியான நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ட்ரம் பிரேக்ஸ்களுடன் கூடிய ரைடர் 125 வெர்ஷனை மலிவு விலையில் டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 பேஸ் வேரியன்ட்: இந்த புதிய TVS Raider 125 பேஸ் வேரியன்ட்டில் இரண்டு வீல்களிலும் ட்ரம் பிரேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதை தவிர, கம்யூட்டர் எல்இடி டிஆர்எல்-க்களுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட்(சிகப்பு விளக்கு), சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஸ்ட்ரைக் ரெட் & விக்கட் பிளாக் என 2 கலர் ஆப்ஷன்கள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மாடல் மற்ற வேரியன்ட்ஸ்ளை விட வித்தியாசமான அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. ஹை-வேரியன்ட்ஸ் SmartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம், ஸ்பிளிட் சீட்ஸ் மற்றும் மார்வெல்-தீம் கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் TFT டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன. TVS நிறுவனத்தின் Raider 125 ஸ்பெசிஃபிகேஷன்கள்: TVS Raider 125 மோட்டார் சைக்கிளானது 7,500rpm-ல் 11.2bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 11.2Nm பீக் டார்க்குடன் ட்யூன் செய்யப்பட்ட 124.8 cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை கொண்டுள்ளது. இந்த மோட்டார் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக்ஸ் உள்ளன, அதே நேரத்தில் பிரேக்கிங் காரணங்களுக்காக 130 மிமீ ட்ரம் பிரேக்ஸ் முன் மற்றும் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Eco மற்றும் Power ஆகிய இரண்டு ரைடிங் மோட்ஸ்களை இந்த பைக் கொண்டுள்ளது. TVS ரைடர் 125 பைக்கிற்கு போட்டி ஹோண்டா நிறுவனத்தின் Honda SP 125 பைக்கின் ஆரம்ப விலை ரூ.86,467 ஆகும். இதற்கிடையில் Hero Xtreme 125R மற்றும் Bajaj Freedom 125 CNG ஆகியவற்றின் துவக்க விலை ரூ.95,000 முதல் இருக்கிறது. இந்த நிலையில் புதிய தொடக்க விலையுடன், இந்த TVS Raider 125-ன் பேஸ் வேரியன்ட் அதன் போட்டி தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. Raider 125 பைக்கில் ட்ரம்-பிரேக் வெர்ஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், டி.வி.எஸ் நிறுவனமானது ஸ்டைல், செயல்திறன் மற்றும் மலிவு விலையில் நல்ல மோட்டார் சைக்கிளை வாங்க விரும்புவோரை ஈர்க்க திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.