AUTOMOBILE

மாருதி சுஸுகி வேகன்ஆர் வால்ட்ஸ் காரின் லிமிடெட் எடிஷன் அறிமுகம்! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

மாருதி சுசூகி இந்தியா (Maruti Suzuki India) நிறுவன இந்தியாவில் வேகன்ஆர் வால்ட்ஸ் (WagonR Waltz) காரின் லிமிடெட் எடிஷனை ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் வரவுள்ள இந்த கார், LXi, VXi மற்றும் ZXi வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகி வரும் மாருதி கார்களில் வேகன்ஆர் காரும் ஒன்றாகும். 1999-ம் ஆண்டு இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 3,250,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தற்போது, ​​இது மிட்-ஹேட்ச்பேக் பிரிவில் 64 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. மாருதி சுசூகி வேகன்ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷன் காரில், ஃபாக் விளக்குகள், வீல்-ஆர்ச் கிளாடிங், பம்பர் ப்ரொடக்டர்கள், சைட் ஸ்கர்ட்ஸ், பாடி சைடு மோல்டிங் மற்றும் காரின் முன்புறம் குரோம் கிரில் போன்ற வெளிப்புற அம்சங்களுடன் வருகிறது. ஒரு காரின் உட்புறத்தை பொறுத்தவரை ஸ்டைலிங் கிட் மற்றும் அழகான தரை விரிப்புகள் உள்ளன. கூடுதலாக, இந்த காரில் தொடுதிரை இசை அமைப்பு, பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளது. இந்தக் காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், டூயல் ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (EBD), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் ஆகியவை உள்ளன. மொத்தத்தில், 12க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வேகன்ஆர் வால்ட்ஸ் காரில் உள்ளன. இதையும் படிக்க: புதிய 2024 TVS Jupiter 110 ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் பற்றிய விவரங்கள் இங்கே..! இந்த வாகனத்தில் 1.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் என இரண்டு கே-சீரிஸ் இஞ்சின் ஆப்ஷன்கள் உள்ளன. ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் (ஐஎஸ்எஸ்) தொழில்நுட்பங்களுடன் டூயல் ஜெட் (Dual Jet), டூயல் விவிடி (Dual VVT) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இரண்டு யூனிட்களிலும் பெட்ரோலில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் CNG விருப்பத்தைப் பெற்றுள்ளது. வேகன்ஆர் வால்ட்ஸ் பெட்ரோல் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜையும், வேகன்ஆர் வால்ட்ஸ் சிஎன்ஜி 33.48 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இதையும் படிக்க: Black cars: கருப்பு நிற கார்கள் வாங்குவதை தவிர்ப்பதற்கான 6 காரணங்கள்… ஏன் தெரியுமா? மாருதி சுசூகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR) கார் 2012-ம் ஆண்டு முதல் 1 மில்லியன் விற்பனையையும், 2017-ல் 2 மில்லியன் விற்பனையையும் எட்டியது. இது 2023-ல் 3 மில்லியனாக அதிகரித்தது. 2024-ம் நிதியாண்டில் வேகன்ஆர் நடுத்தர ஹேட்ச்பேக் பிரிவில் 61% சந்தைப் பங்களிப்பைப் பெற்றிருந்தாலும், 2025-ம் ஆண்டில் இது 65 சதவிகிதமாக அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.