AUTOMOBILE

ஒரே சார்ஜில் 180 கி.மீ வரை செல்லும் iVOOMi S1 Lite எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்!

எலெக்ட்ரிக் டூ-வீலர் மார்க்கெட்டில் முன்னணியில் உள்ள மற்றும் புனேவை மையமாக கொண்டு செயல்படும் iVOOMi எனர்ஜி நிறுவனமானது, சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 லைட் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கை ப்ளூ, டார்க் ப்ளூ, கிரே, ரெட், மெரூன் மற்றும் ஒயிட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள iVOOMi S1 Lite ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999-ல் இருந்து தொடங்குகிறது. S1 லைட் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180கிமீ தூரம் வரை செல்லும். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் சிக்கனமான மற்றும் அதிவேக இ-ஸ்கூட்டராக iVOOMi S1 Lite உள்ளது. iVOOMi S1 Lite எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள்: S1 லைட் இ-ஸ்கூட்டரை iVOOMi நிறுவனம் பல பயண தேவைகளுக்கு ஏற்றவாறு நீடித்துழைக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் வகையிலும் வடிவமைத்துள்ளது. ERW 1 கிரேட் சேஸ்ஸுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நீடித்துழைக்கும் திறன் கொண்டது. மேலும் பல்வேறு நிலப்பரப்புகளில் எளிதாக ஓட்டி செல்லும் வகையில் இது 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. தினசரி அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல ஏற்றவாறு கூடுதல் வசதிக்காக, இந்த இ-ஸ்கூட்டர் 18 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இதையும் படிக்க: மழை நீரில் மூழ்கிய கார் பழுதாகாமல் இருக்க..? - நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்! ரைடர்களுக்கு இந்த ஸ்கூட்டரில் 12-இன்ச் அல்லது 10-இன்ச் வீல்ஸ்களை தேர்வு செய்யும் ஆப்ஷன் உள்ளது. மேலும் இந்த இ-ஸ்கூட்டர் USB சார்ஜிங் போர்ட் (5V, 1A) மற்றும் வேகத்தை எளிதாகக் கண்காணிப்பதற்கான LED டிஸ்ப்ளே ஸ்பீடோமீட்டர் போன்ற பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருந்தால், iVOOMi நிறுவனம் ரூ.4,999 என்ற விலையில் ஸ்மார்ட் அம்சங்களை மேம்படுத்த சில அப்கிரேட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் பின்வருவன அடங்கும்: - DTE (Distance to Empty) இன்டிகேஷன் - டர்ன் பை டர்ன் நேவிகேஷன் - கால் & எஸ்எம்எஸ் அலெர்ட்ஸ் பேட்டரி மற்றும் செயல்திறன்: புதிய iVOOMi S1 Lite ஸ்கூட்டரானது நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான அட்வான்ஸ்ட் பேட்டரி டெக்னலாஜியை கொண்டுள்ளது. இது இந்தியாவின் லைட்வெயிட் சார்ஜர் மற்றும் நீடித்துழைப்பதற்காக வாட்டர்-ரெசிஸ்டென்ட் IP67 பேட்டரியை கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 53 கிமீ வேகத்தில் செல்லும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.