AUTOMOBILE

மகேந்திரா தார் ராக்ஸ் எப்படி இருக்கு? - முதல் காரை பெற்றுக்கொண்ட யூடியூபர் வெளியிட்ட வீடியோ!

மகேந்திராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றான தார் ராக்ஸ், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகேந்திராவின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலில் ஒன்றான தார் ராக்ஸ் இறுதியாக வாடிக்கையாளர்களை சென்றடைய தொடங்கியுள்ளது. இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் வாடிக்கையாளர் ஒருவர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலை பெற்றுக் கொள்கிறார். அந்த வீடியோவில், மகேந்திராவின் தனித்துவமான ஸ்டைலில் சிவப்பு நிற தார் ராக்ஸை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கிறார். இது டாப் மாடலா, இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை. இருப்பினும், எஸ்யூவி டாப்-எண்ட் டீசல் ஆட்டோமேட்டிக் 4×4 டிரிம் போல தெரிகிறது. டெல்லி என்சிஆரில் டெலிவரி தொடங்கியது மகேந்திரா நிறுவனம் இந்த மாடலுக்கான முன்பதிவுகளை இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. மேலும் தசராவுக்குப் பிறகு இது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியது. இதையடுத்து இந்த மாடலின் முதல் டெலிவரி டெல்லி என்சிஆரில் ஆரம்பித்துள்ளதாக காரை வாங்க வந்த யூடியூபர் கூறியுள்ளார். வீடியோவில், 3 கதவு கொண்ட தனது தாரில் டீலர்ஷிப் ஷோரூமுக்கு வருகை தருகிறார் அந்த யூடியூபர். அங்கே, ​​இன்னும் சில வாடிக்கையாளர்கள் தேவையான ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மேலும் அவர்களும் எஸ்யூவி-யை டெலிவரி எடுத்துச் செல்ல வந்திருப்பது போல் தெரிகிறது. ஜீப் ரூபிகான் அந்த யூடியூபர் தார் ராக்ஸை ஒரு ஜீப் ரூபிகான் என்று கூறுவதைக் கேட்க முடிகிறது, ஜீப் ரூபிகான் ரூ.67.65 லட்சம் ஆரம்ப விலையில் வருகிறது, அதே சமயம் அதன் டாப் மாடல் ரூ. 71.65 லட்சம் (எல்லா எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. அனைத்து ஆவணங்களையும் முடித்துவிட்டு, டீலர்ஷிப்காரர்கள் காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுத்து வருகிறார்கள். பின்னர் அந்த யூடியூபர், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சில சடங்குகளை செய்துவிட்டு காரை வீட்டிற்கு எடுத்துச் செல்வது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. தார் ராக்ஸ் மாடல்கள் மற்றும் விலை மகேந்திரா தார் ராக்ஸ்-ஐ எம்எக்ஸ்1 (MX1), எம்எக்ஸ்3 (MX3), எம்எக்ஸ்5 (MX5), ஏஎக்ஸ்3எல் (AX3L), ஏஎக்ஸ்5எல் (AX5L) மற்றும் ஏஎக்ஸ்7எல் (AX7L) ஆகிய ஆறு வகைகளில் வாங்கலாம். இந்த வாகனத்தின் விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்குகிறது மற்றும் இதன் டாப் மாடல் ரூ.22.49 லட்சம் (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. முக்கிய அம்சங்கள் மகேந்திராவின் தார் 3 கதவுகளைக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது சந்தையில் வெளியாகி இருக்கும் தார் ராக்ஸில் 5 கதவுகள் இடம் பெற்றிருக்கும். மகேந்திராவின் தார் ராக்ஸ் புதிய எம்-கிளைட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது இரண்டு இன்ஜின் விருப்பங்களில் வருகிறது. 2.2L mHawk டீசல் எஞ்சின் மற்றும் 2.0L mStallion டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின். இதையும் படிக்க: Monsoon Driving Tips | மழைக்காலத்தில் பாதுகாப்பாக கார் ஓட்டுவது எப்படி? - அவசியம் இதையெல்லாம் பாலோ பண்ணுங்க! பெட்ரோல் எஞ்சின் 175 ஹார்ஸ்பவர் மற்றும் 380 Nm-ஐ உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் டீசல் 170 ஹார்ஸ்பவர் மற்றும் 330 Nmஐ உருவாக்குகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இரண்டும் கிடைக்கும். 5 கதவுகளைக் கொண்ட இந்த எஸ்யூவி தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் 4 வீல் டிரைவையும் வழங்குகிறது. இதில் மொத்தம் ஆறு டிரிம்கள் உள்ளன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.