AUTOMOBILE

டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் போட்டியாக களமிறக்கப்பட்ட 2024 ஹூண்டாய் அல்காஸர் கார்... முன்பதிவு தொடங்கியது!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய ஹூண்டாய் அல்காஸர் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ரூ.25,000 கொடுத்து இந்தக் காரை நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். 6/7-இருக்கைகள் கொண்ட SUV மாடலான அல்காஸர், மஹிந்திரா ஸ்கார்பியோ- N, டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள எந்த ஹூண்டாய் டீலர்ஷிப்பிலும் அல்காஸர் ஃபேஸ்லிஃப்டை நீங்கள் முன்பதிவு செய்யலாம் அல்லது நிறுவனத்தின் ஆன்லைன் தளமான Click To Buy-யிலும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய வரிசையில் உள்ள ஒரே மூன்று வரிசை SUV கார் அல்காஸர் மட்டுமே. இதுதவிர ஹூண்டாய் நிறூவனத்தில் எக்ஸ்டர் (Exter), வீனுயூ (Venue), கிரெட்டா (Creta) மற்றும் டஸ்கான் (Tucson) போன்ற இரண்டு வரிசை SUV கார்கள் உள்ளது. 2024 ஆண்டின் ஹூண்டாய் அல்கஸார் புதிய குவாட்-பீம் LED ஹெட்லைட்டுடன் புதிய டார்க் குரோம் கிரில்லைக் கொண்ட புதிய முன்பகுதியுடன் வருகிறது. புதிய H-வடிவ LED DRLகள் உள்ளன, அவற்றுக்கிடையே ஒற்றை LED பட்டியுடன் காரின் முகப்பில் குறுக்காக உள்ளது. பின்புறத்தில், இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், டெயில்கேட் மற்றும் ஒருங்கிணைந்த நிறுத்த விளக்குகள் என அனைத்தும் புதிய அம்சங்களுடன் உள்ளது. மேலும், பம்பர்கள் (முன் மற்றும் பின்புறம்), ஸ்கிட் பிளேட்டுகள் (முன் மற்றும் பின்புறம்), பிரிட்ஜ் வகை ரூஃப் மற்றும் 18 இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் ஆகியவை புதிதாக உள்ளது. புதிய ரோபஸ்ட் எமரால்டு மேட் உட்பட ஒன்பது வண்ணங்களில் இந்தக் கார் கிடைக்கிறது. ஹூண்டாய் புதிய அல்காஸர் காரில் 70-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வசதி இணைக்கப்பட்ட அம்சங்கள் உள்ளது. இந்த SUV காரில் 40-க்கும் மேற்பட்ட நிலையான பாதுகாப்பு அம்சங்களையும், ADAS உட்பட 70-க்கும் மேற்பட்ட மொத்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என நான்கு வேரியண்டுகளில் 2024 ஹூண்டாய் அல்கஸார் கார் வருகிறது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! புதிய ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரின் தற்போதைய மாடலில் உள்ள அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களே தொடர்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் இஞ்சின் (160PS பவர் மற்றும் 253Nm இழுவிசை) மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் இஞ்சின் (116PS பவர் மற்றும் 250Nm இழுவிசை) உள்ளது. பெட்ரோல் வெர்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆப்ஷன் உள்ளன. அதே சமயம் டீசல் மோட்டாரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டார்க் கன்வெர்டர் விருப்பங்களைக் கொண்டுள்ளது. முந்தைய மாடலின் விலை ரூ.16.77 லட்சம் முதல் ரூ.21.28 லட்சம் வரை உள்ள நிலையில், ஹூண்டாய் அல்காஸார் 2024-ன் விலை ரூ.17 லட்சம் முதல் ரூ.23 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த SUV கார் செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.