AUTOMOBILE

மழை நீரில் மூழ்கிய கார் பழுதாகாமல் இருக்க..? - நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்!

கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள என்சிஆர் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. பெரிய நகரங்களில், குறிப்பாக அடித்தள பார்க்கிங் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், கார்கள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும். பல கார் உரிமையாளர்கள் வெள்ளத்தில் சிக்கிய காரை இனி ஓட்ட முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வழிமுறைகளை கவனமாக பின்பற்றினால் உங்கள் வாகனம் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் காரும் வெள்ளத்தில் ஓரளவு மூழ்கியிருந்தால், பயப்பட வேண்டாம், இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றவும். 1. என்ஜினை ஆன் செய்ய வேண்டாம்: கார் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, என்ஜினை ஆன் செய்யக்கூடாது. என்ஜினை ஆன் செய்யும்போது என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தால், அது முற்றிலும் சேதமடையலாம். அதற்கு பதிலாக, காரின் கதவுகளைத் திறக்கவும், இதனால் காரில் உள்ள அதிகபடியான தண்ணீர் வெளியேறும். மேலும், அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து காரை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். லைட்கள், ரேடியோ, பவர் விண்டோஸ்கள் போன்ற எலக்ட்ரிகல் சுவிட்ச்சை ஆன் செய்யக்கூடாது. 2. மெக்கானிக்கை அழைக்கவும்: அடுத்த கட்டமாக சேவை மையம் அல்லது பயிற்சி பெற்ற மெக்கானிக்கை அழைக்க வேண்டும். அவர் காரின் சேதத்தை மதிப்பிட முடியும். உங்கள் காப்பீட்டு வழங்குநரிடம் தெரிவிக்க வேண்டிய நேரமும் இதுவே. வாகனத்தை சேவை மையம் அல்லது பயிற்சி பெற்ற மெக்கானிக்கிடம் கொண்டு செல்லுங்கள், இதனால் வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடியும். இதையும் படிக்க: 2030-க்குள் இந்திய மக்கள் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுவார்கள் - ஆய்வில் தகவல்! 3. கார் பேட்டரியை வெளியே எடுக்கவும்: காரில் தண்ணீர் புகுந்தால், காரின் பேட்டரியை உடனடியாக வெளியே எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் காரின் மின் பாகங்களில் தண்ணீர் நுழையாது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால் எலெக்ட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். 4 அனைத்து வகையான ஃப்லூயிட்களை மாற்றவும்: உங்கள் காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்தால், அதன் என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்றவும். என்ஜினுக்குள் தண்ணீர் வரும்போது, ​​அது என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட்டுடன் கலக்கிறது. இதன் காரணமாக, என்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட் இரண்டும் கெட்டுவிடும். எனவே, காரைத் தொடங்குவதற்கு முன், என்ஜின் எண்ணெய் மற்றும் கூலன்ட்டை மாற்றவும். இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸின் புதிய கார் அறிமுகம்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா? 5 . ஃபியூயல் டேங்க்கை காலி செய்யவும்: அனைத்து திரவங்களும் மாற்றப்பட்டவுடன், அடுத்த கட்டமாக ஃபியூயல் டேங்க்கை காலி செய்ய வேண்டும், ஏனெனில் தண்ணீர் உள்ளே நுழைந்திருக்கலாம். ஃபியூயல் டேங்க்கில் தண்ணீர் இருந்தால் அது, சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்டர் அல்லது கார்பூரேட்டர் மற்றும் பிற பாகங்களில் சிக்கலை ஏற்படுத்தும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.