AUTOMOBILE

இந்தியாவிலேயே விலை அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அறிமுகப்படுத்திய BMW... எவ்வளவு தெரியுமா?

BMW நிறுவனம் இந்தியாவில் BMW CE 04 என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே அதிக விலையுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சொல்லப்படும் இதன் விலை ரூ.14.90 லட்சமாகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செப்டம்பர் மாதத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேக்னட் லிக்கியூட் கூல்டு ஒத்திசையுடன் இயங்கும் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 42hp பவரையும் 120Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இதற்கு உறுதுணையாக 8.5kWh திறனுள்ள பேட்டரியும் உள்ளது. ஜீரோவிலிருந்து 50கி.மீ வேகத்தை வெறும் 2.6 நொடிகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடைந்துவிடுகிறது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 120கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரின் கூடவே ஒருங்கிணைக்கப்பட்ட 2.3kW பவருள்ள சார்ஜர் வருகிறது. நீங்கள் வீட்டில் சார்ஜ் செய்யும் போது, 0-80% சார்ஜ் மூன்று மணி முப்பது நிமிடங்களில் ஏறிவிடுகிறது. ஒரு தடவை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால், எந்தவித தடங்கலும் இன்றி 130கி.மீ தூரம் வரை செல்ல முடியும் என BMW நிறுவனம் கூறுகிறது. BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மொத்த எடை 231 கிலோ கிராமாகும். 15 இன்ச் வீல்கள் உள்ள இந்த ஸ்கூட்டரின் சீட் உயரம் 780mm ஆகும். ஆகையால் எல்லா உயரத்தில் இருப்பவர்களுக்கும் இது ஏற்ற வகையில் இருக்கும். டெலஸ்கோபிக் ஃபோர்க், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான பின்பக்க சஸ்பென்ஸன், BMW Motorrad-ன் பிரத்யேக ஏபிஎஸ் வசதி, ஆட்டோமெட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ASC) போன்ற சிறப்பம்சங்களும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளது. BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர் என அனைத்தும் LED விளக்குகளாக உள்ளது. 10.25 இன்ச் வண்ணமயமான TFT ஸ்க்ரீன், கணினி வசதி, கார்களுக்கு இருப்பது போன்ற சார்ஜிங் அமைப்பு, சார்ஜிங் செயல்பாடுகளுடன் கூடிய ஸ்டோரேஜ் வசதி, வரவேற்பு லைட், விண்ட்ஷீல்டு, சாவி இல்லாமலேயே ஆன் செய்யும் வசதி, ரிவர்ஸ் எடுப்பதற்கு வசதி, சைடு ஸ்டாண்டுடன் பார்க்கிங் பிரேக்கை இயக்கும் வசதி எனப் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. Also Read | UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூடரோடு சேர்த்து ஆப்ஷனல் பேக்கேஜாக கம்ஃபோர்ட் பேக்கேஜ் ஒன்றும் உங்களுக்கு தரப்படுகிறது. இதில் உங்களுக்கு க்ரிப் வசதியையும் பின் இருக்கையில் சாய்ந்திருக்க ஏதுவாக பேக்ரெஸ்டும் உள்ளது. இதற்கு அடுத்ததாக உள்ள டைனமிக் பேக்கேஜில் ப்ரோ ரைடிங் மோட், ஹெட்லைட் ப்ரோ, ஏபிஎஸ் ப்ரோ, DRL ஆகிய அம்சங்கள் உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.