EDUCATION

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக் கலந்துரையாடல்... பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி...

மாணவர்களுக்கு கலந்துரையாடல் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் கற்றல் திறனை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இணையதளம் மூலம் கலந்துரையாடி மதிப்பீடு செய்யும் முறையைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்ட அளவிலும் குறிப்பிட்ட பள்ளிகளைத் தேர்வு செய்து அதில் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் அழைத்து அவர்களிடம் ‘கூகுள் மீட்’ மூலம் ஆசிரியர் பயிற்சி பள்ளி சிறந்த பயிற்றுநர்கள் திறன் அறியும் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளது. அதற்கு ஏற்ப மதிப்பீடுகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்வு செய்யப்படும் பள்ளிக்கு ஒரு நாள் முன்னதாக கூகுள் மீட்டில் பங்கு பெறவேண்டிய மாணவர்கள் குறித்த விபரங்கள் தலைமையாசிரியருக்குத் தெரிவிக்கப்படும். தலைமையாசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘டேப்’ கணினியின் மூலம் கூகுள் மீட் பதிவிறக்கம் செய்து இணைய வசதி, ஒலி வாங்கி போன்றவை சரியாக உள்ளதா? என்பதைச் சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களுடன் மதிப்பீடு உரையாடல் நடைபெறும் போது இடையில் மாணவர்கள் பதிலளிக்க ஆசிரியர்கள் உதவக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையும் படிங்க: வார விடுமுறை கொண்டாட்டம்… குடும்பத்துடன் முத்துநகர் கடற்கரையில் குதுகலம்… இந்த புதிய முயற்சி மூலம் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றல் திறன் கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலத்திறன் கலந்துரையாடல், மானூர் எட்டாம் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 மாணவர்களுக்குத் தமிழ் கற்றல் திறன் நேர்காணல் நடைபெற்றது. இதுபோல் பாளையங்கோட்டை ரூரல் சத்திரம் குடியிருப்பு (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்குத் தமிழ், ஆங்கிலத் திறன் அறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்திற்கான இணையதள திறனாய்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான தகவல் தொடர்பு ஏற்பாடுகளை அனைவருக்கும் திருநெல்வேலி கல்வித்திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.