EDUCATION

இஸ்ரோ நடத்தும் வினாடி வினா போட்டி... 3 மாவட்ட மாணவர்களுக்குத் தான் வாய்ப்பு...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட சந்திரயான் - 3ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதிலிருந்து நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் துல்லிய ஆய்வுகளை நடத்தியது. உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்ததைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதலாமாண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இயங்கிவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வளாக நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டி நடைபெறவுள்ளது. இதையும் படிங்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? லேட்டஸ்ட் தகவல்கள் இதோ..! ‘இந்தியாவில் விண்வெளி செயல்பாடுகள்’ என்கிற தலைப்பில் ஜூலை 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும் போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கேற்கலாம். போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.வினாடி வினா போட்டியில் ஒரு பள்ளி சார்பாக இரண்டு குழுக்கள் மட்டுமே பங்கேற்க இயலும். ஒரு குழுவில் மூன்று பேர் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளி மூலமாக வருகிற 22ஆம் தேதி நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளித்துறை நிலையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் - 627 133 என்ற முகவரியில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04637-281940, 281942, 281825 என்கிற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 9486041737, 9994239306 செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். aormt@iprc.gov.in மின்னஞ்சல் மூலமும் பதிவு செய்யலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். பள்ளி அடையாள அட்டையைத் தவறாது கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.