EDUCATION

நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கலாம்? ஆசிரியர்களே சீக்கிரம் அப்ளை பண்ணுங்க...

நல்லாசிரியர் விருது மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறழ்ந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதியை , ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 348 ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 38 ஆசிரியர்கள் என மொத்தமாக 386 ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருது பெற ஆசிரியர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்து பள்ளி கல்வி துறைக்கு அனுப்பும், பின்னர் அவர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் விருதும், வெள்ளி பதக்கமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும். இதையும் வாசிக்க: உங்க பேருல எத்தனை சிம் கார்டு இருக்கு!! போன் இருந்தா நீங்களே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்… தகுதிகள்: 1. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது பணிபுரிந்து இருக்க வேண்டும். 2. மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களே விருதுக்கு தகுதியானவர்கள். 3. வகுப்பறையில் இருந்து கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கே விருது. அலுவலக மற்றும் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. 4.ஆசியர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருக்க கூடாது. 5. ஆசிரியர்கள் மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரித்தல், பின்தங்கிய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும். 6. அரசியல் தொடர்பு உடையவராக இருக்க கூடாது. 7. கல்வியை வணிகமாகவோ , விதிமுறைகளுக்கு முரணாக நடப்பவராகவோ இருக்க கூடாது. இதுக்கு முன்னர் நல்லாசிரியர் விருது பெற்றவராக இருக்க கூடாது. 8 ஆசிரியரின் கடைசி ஐந்து ஆண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் கணக்கில் கொள்ளப்படும். இந்த தகுதிகளின் அடிப்படையில் விருது பெற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29 ஆகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.