EDUCATION

மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே வங்கி கணக்கு : அரசின் சூப்பர் திட்டம் இதோ!

அஞ்சல் சேமிப்பு கணக்கு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே புதிய சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் வங்கி கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இந்த கணக்கு தொடங்க குறைந்தபட்ச வைப்புத் தொகை ஏதும் தேவையில்லை. இதற்கான முகாம் தமிழக முழுதும் உள்ள பள்ளிகளில் நடந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அஞ்சல் சேமிப்பு கணக்கு துவங்கியதற்கான முகாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இதுகுறித்து தஞ்சை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கு. தங்கமணி கூறுகையில், பத்து வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்க அவர்களின் ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பத்து மற்றும் பத்து வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க அவர்களின் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகியவை தேவைப்படும். மேலும் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் தேவைப்படும் மாணவர்களுக்கு தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மற்றும் இதர ஆதார் சேவை வழங்கப்படும். இதையும் வாசிக்க: Suruli Waterfalls : சுற்றுலா பயணிகளுக்கு செம வீக் எண்ட் ட்ரீட் இது - சுருளி அருவிக்கு மீண்டும் அனுமதி… அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஆதார் பதிவு, திருத்தம், மற்றும் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் போன்ற ஆதார் சேவைகள் வழங்கப்படுகின்றது. எனவே பள்ளி மாணவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவங்கிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகவும் என்று கூறினார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.