EDUCATION

ஐஐடி உடன் போட்டி போடும் கல்லூரி... ரூ.85 லட்சம் கிடைத்தது எப்படி?

ஐஐடி உடன் போட்டி போடும் கல்லூரி ஐஐடி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல லட்சம் சம்பளத்தில், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் நிலையில், அதைவிட அதிகமான வாய்ப்புகளை ஒரு கல்லூரி உருவாக்கிக் கொடுக்கிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, இளைஞர்கள் பெரிதும் விரும்புவது பொறியியல் அல்லது மருத்துவப் படிப்பைத்தான். ஆயிரக்கணக்கான படிப்புகள் இருக்கும்போது, பெரும்பாலான மாணவ, மாணவிகள் இந்த இரண்டு படிப்புகளை தேர்ந்தெடுத்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதே காரணம். மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், பொறியியல் படிக்க வேண்டும் என்றால், குறிப்பாக IIT அல்லது NIT ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்றால், JEE முதன்மை மற்றும் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். JEE தேர்வில் தேர்ச்சி பெறாமல் IIT அல்லது NIT கல்வி நிறுவனங்களில் சேரும் கனவு நிறைவேறாது. ஒரு சிலர் JEE தேர்வில் வெற்றிபெற்றாலும், எங்கு அட்மிஷன் எடுப்பது? வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்குமா? என்று குழப்பம் அடைகின்றனர். ஆனால், ஆண்டுக்கு ரூ.85 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்த கல்லூரி ஒன்று இருக்கிறது. அதைத்தான் பார்க்கப் போகிறோம். இதையும் படிங்க : மருத்துவப் படிப்புக்கு வெறும் ரூ.3,000 மட்டுமே - தமிழ்நாட்டில் இருக்கும் இந்த தனியார் கல்லூரி பற்றி தெரியுமா? நாம் குறிப்பிடும் கல்லூரி IIIT. நாடு முழுவதும் 28 இடங்களில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருச்சி என இரண்டு இடங்களில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இருப்பினும் நாம் இப்போது குறிப்பிடுவது ராய்ப்பூரில் இருக்கும் IIIT-NR. இங்கு பி.டெக்., படித்த ராஷி பக்காவுக்கு கடந்த ஆண்டு ரூ.85 லட்சத்தில் வேலை கிடைத்தது. 2023ஆம் ஆண்டில் இந்த கல்லூரியில் படித்த எந்தவொரு மாணவருக்கும் கிடைக்காத ஊதியம் இது. இந்த சலுகைக்கு முன்பே, ராஷி பக்காவுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஆனாலும், அவர் நிறைய நேர்காணல்களில் பங்கேற்று, இறுதியில் சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். IIIT-NRன் மற்றொரு மாணவரான யோகேஷ்குமார், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.56 லட்சம் சம்பளத்தில் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜினியர் என்ற வேலைவாய்ப்பை பெற்றார். 2020ஆம் ஆண்டில் IIIT-NR மாணவர் ரவி குஷ்வாஹா ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற்றார். இதன்படி, IIIT-NRல் படித்து வேலைவாய்ப்பு பெற்றவர்களின் சராசரி சம்பளம் ரூ.13.6 லட்சமாக இருப்பதாக, அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. IIIT கல்வி நிறுவனத்தில் சேர்க்கை எப்படி? ஜேஇஇ முதன்மை தேர்வை எழுத வேண்டும். அதன்பிறகு, இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு ஐஐஐடி-யில் இடங்கள் ஒதுக்கப்படும். 50% இடங்கள் தேசிய அளவிலான கலந்தாய்வு அடிப்படையிலும், 50% மாநில ஒதுக்கீட்டின் மூலமும் நிரப்பப்படுகின்றன. IIIT-ல் சேரத் தேவையான ஆவணங்கள் 10, 12வது மார்க் ஷீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அட்டை (JEE Mains/GATE/UGC-NET) விண்ணப்பப் படிவம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.