EDUCATION

ஆசிரியர்கள் பணியிட மாற்றம்... பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க ஆசிரியர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத அனைத்து வகை ஆசிரியர்களும் (இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்) ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற விருப்ப மாறுதலுக்கான விண்ணப்பத்தை இன்று (11ஆம்தேதி) மாலைக்குள் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வி மாவட்டத்திற்குள் வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்விற்கு தற்போது மீண்டும் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு உரிய அட்டவணைப்படி நடத்தப்படும். இதையும் படிங்க: தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சீரானது… விளைச்சல் அதிகரிக்க விவசாயிகள் செய்ததென்ன… பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 1, 2 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் நாளை 12ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 15ஆம் தேதியும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / ஆசிரியர்கள் பணியிட மாற்றம்... பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்... ஆசிரியர்கள் பணியிட மாற்றம்... பொது மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்... தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றம் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tirunelveli,Tamil Nadu Last Updated : July 11, 2024, 11:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : S Santhanakumar தொடர்புடைய செய்திகள் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க ஆசிரியர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்காத அனைத்து வகை ஆசிரியர்களும் (இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்) ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற விருப்ப மாறுதலுக்கான விண்ணப்பத்தை இன்று (11ஆம்தேதி) மாலைக்குள் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . விளம்பரம் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வி மாவட்டத்திற்குள் வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்விற்கு தற்போது மீண்டும் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு உரிய அட்டவணைப்படி நடத்தப்படும். இதையும் படிங்க: தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை சீரானது… விளைச்சல் அதிகரிக்க விவசாயிகள் செய்ததென்ன… பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 1, 2 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் நாளை 12ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் 15ஆம் தேதியும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: govt teachers , Local News , school education department , Tamilnadu , tirunelveli First Published : July 11, 2024, 11:36 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.