EDUCATION

10ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்... மாதம் ரூ.70,000 சம்பாதிக்கலாம்...

பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc. Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு (Diploma) விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவருக்குப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகள்: B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் (Craftmanship Course in Food Production&Patisserie) உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு (Craftmanship Course in Food & Beverage Service), பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு,(Diploma in Bakery & Confectionary) சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், உயர் தர உணவகங்கள் விமானம் துறை, கப்பல் துறை மற்றும் சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் உண்டு. இதையும் படிங்க: ஆடி மாத கடைசி வெள்ளி… ஆச்சரியப்படுத்தும் காய்கறி விலை… சிறப்பம்சங்கள்: சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO தரச்சான்று பெற்ற நிறுவனம். Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022 ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசையில் 13வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. தகுதி: இந்த நிறுவனத்தில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 45% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும். இதையும் படிங்க: ஆடி மாத கடைசி வெள்ளி… விண்ணை முட்டும் பூக்கள் விலை… மல்லிப்பூ விலை தெரியுமா… ஊதியம்: ஆரம்பக் கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாகப் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம் 2-வது தளம் தென்காசி என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண்: 04633-214487 மற்றும் அலைபேசி எண்: 7448828513 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இதையும் படிங்க: நான் வெஜ் உணவுக்கு நோ நோ சொல்லும் மக்கள்… தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா… விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்தப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 18.08.2024 ஆகும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.