EDUCATION

அணில் விளையாடும் முற்றம்... விரிவுபடுத்தப்படும் அன்பாடும் முன்றில் திட்டம்...

அன்பாடும் முன்றில் திட்டம் திருநெல்வேலி மாவட்டக் கலெக்டரின் முன்னெடுப்பால் அன்பாடும் முன்றில் திட்டம் திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டில் மேலும் 4 மாவட்டங்களுக்கு இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தொடக்கக் கல்வியைத் திணிக்காமல் ஆட்டம், பாட்டம் விளையாட்டுகள் மூலம் கற்றலைத் தமிழக அரசு இனிமையாக்கி உள்ளது. மேலும், அரசு பள்ளிகள் டிஜிட்டல் மயமாகி, ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாறி வருகின்றன. வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கத் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட பள்ளிச் சூழலை மேம்படுத்த கலெக்டர் கார்த்திகேயேன் கடந்த கல்வி ஆண்டில் பிரத்தியேகமாக ‘அன்பாடும் முன்றில்’ என்ற திட்டத்திற்கான முன்னெடுப்பைத் தொடங்கினார். சங்க கால இலக்கியமான குறுந்தொகையில், ‘அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றில்’ என்ற வரிகள் உள்ளன. அதை அடிப்படையாகக் கொண்டு அணில் விளையாடும் முற்றத்தை அன்பால் விளையாடும் முற்றமாக மாற்றி அன்பாடும் முன்றில் என இத்திட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பெயரிடப்பட்டது. இத்திட்டமானது, பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கி அனைத்துத் துறைகளிலும் அவர்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். பள்ளியில் ஒற்றுமை, இலக்கியம், கலாச்சாரம், உளவியல் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாணவ, மாணவிகளின் திறனை வளர்க்கக் குழு விளையாட்டு உட்படப் பல புதிய நிகழ்ச்சிகளை நடத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த கல்வி ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 45 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலியில் மாணவர்கள் வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் பழகுவதற்கு மாவட்ட கல்வி, காவல், வருவாய், உள்ளாட்சி, விளையாட்டு, திறன் மேம்பாடு, மாவட்ட கலை மன்றம் ஆகிய துறை அதிகாரிகளும், மதுரை செல்லமுத்து பவுன்டேஷனைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். இதையும் படிங்க: மணிமுத்தாறு அருவி போக ரெடியா… சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி… இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசே நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. தற்போது இந்த திட்டம் திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அன்பாடும் முன்றில் திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அன்பாடும் முன்றில் திட்டம் செயல்படுத்தப்படும் என திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.