EDUCATION

நீங்க வேற லெவல் போங்க!! அரசு பள்ளியில் சேர்ந்தால் ₹ 5000 ஊக்கத்தொகை... அசத்திய கிராம மக்கள்...

சேதுராயன் குடிக்காடு - அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ‌ ஒரத்தநாடு அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதத்தை அதிகரிப்பதற்காக கிராம மக்கள் சார்பில் கல்வி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையினர், புதிதாக வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன் குடிகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளியில் 37 மாணவர்களும் உயர்நிலைப் பள்ளியில் 127 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தின் அருகிலேயே தனியார் நர்சரி பள்ளி செயல்பட்டு வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 60 லிருந்து,37 ஆக குறைந்தது. இந்த இரண்டு பள்ளிகளிலுமே மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக சேதுராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் மற்றும் கிராம மக்களின் நிதியின் மூலம் சேதுராயன் குடிக்காடு பள்ளி வளர்ச்சி குழு அறக்கட்டளையினர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, கட்டிட வசதி, ஸ்மார்ட் போர்டுகள், பள்ளிக்குத் தேவையான நாற்காலி, மேசை, உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதையும் வாசிக்க: Cave Temple: ஈசனும் பெருமாளும் ஒரே அறையில்!! தென் மாவட்டத்தில் கம்பீரம் காட்டும் பாண்டியர் கால அதிசய குடைவரை கோயில்… அதன் ஒரு பகுதியாக தொடக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக முதலாம் வகுப்பு சேரும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் புதிதாக சேர்ந்த ஐந்து சிறுவர்களுக்கு தலா ரூ.5000, 4-ம் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவருக்கு ரு.5 ஆயிரமும், 6 வகுப்பில் சேர்ந்த 13 மாணவர்களுக்கு தலா ரூ.3000 ஆயிரமும், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற 42 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த பத்து மாணவர்களுக்கு 6000- முதல் 2000 வரை சிறப்பு பரிசும், மேலும் தேர்ச்சி பெற்ற 32 மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.500 என மொத்தம் ரூ.1 லட்சத்து இருபதாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அரசு பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்க அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதுபோன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என சேதுராயன் குடிக்காடு கிராம‌ மக்கள் சார்பில் கல்வி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.