ENTERTAINMENT

"சும்மா Bigg Boss" இந்தி பிக்பாஸில் தமிழில் பேசி கெத்து காட்டிய ஸ்ருதிகா... வீடியோ வைரல்

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது செயல்பாடுகளால் கவனம் ஈர்த்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களின் பேராதரவு இருந்து வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 7 வரை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் 8-வது சீசனில் இருந்து விலக நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சில தினங்கள் முன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியது. இதில் விஜய் டிவி பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என பலரும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18-வது சீசனில் முதன் முதலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையும், ‘‘குக் வித் கோமாளி’’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து முதன் முறையாக இந்தி பிக் பாஸில் அடியெடுத்து வைத்திருக்கும் ஸ்ருதிகா எவ்வாறு விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிலவிவந்த நிலையில், அதனை கச்சிதமாக நிறைவேற்றிவருகிறார் ஸ்ருதிகா. தனக்கே உரிய கேரக்டரை ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸில் வெளிக்காட்டி ரசிகர்களை கவனம் ஈர்த்துவருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எப்படி தனது குழந்தை தனத்தால் ஸ்ருதிகா கவனம் ஈர்த்தாரோ, அதே குழந்தை தனத்தால் தற்போது இந்தி பிக்பாஸிலும் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். பிக்பாஸில் இவர் வெளிப்படுத்தும் சுட்டித்தனங்கள், வெகுளி பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் போல சிரித்துக்கொண்டே பேசும் இவரின் செயல், முதல் நாளில் செயற்கைத்தனமாக இருப்பதாக தெரிவித்த வடஇந்திய ரசிகர்கள், கடந்த இரண்டு நாட்களாக அந்த எண்ணத்தை மாற்றி, ஸ்ருதிகாவின் செயல்கள் ரசிக்க வைப்பதாக தெரிவித்து வருகின்றனர். சல்மான் கான் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும்போதே, “நான் தமிழ் நடிகை எங்களுடைய ரசிகர்களுக்காக நீங்க தமிழில் வணக்கம் சொல்லுங்க” என்பதில் தொடங்கி தனது சுட்டித்தனத்தை வெளிக்காட்டினார் ஸ்ருதிகா. இதேபோல், அங்கும் சென்று தனது காதல் கணவர் குறித்தும், கல்யாண வாழ்க்கை குறித்தும் கலகலப்பாக பேசி கவனம் ஈர்த்து வருகிறார். #Shruthika is winning hearts 💕 And @arjunraaj is famous all over India now 🔥 #BiggBoss18 #BiggBoss #BB18 #ShruthikaArjun pic.twitter.com/OkETYEr9tA நேற்று அப்படித்தான், வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்ததை என்னவென்று பிக்பாஸ் கேட்க, இந்தி ஷோவில் இருப்பதையும் மறந்து “சும்மா பிக்பாஸ்” என்று தமிழில் பேசினார். Bigg Boss : Kya chal raha hai Shrutika : Vaisa hin time paas kar raha hai chumma bigg boss 🤣🤣 #Biggboss18 #Biggboss #BB18 #ShrutikaArjun #Shrutika #Shruthika pic.twitter.com/QjOX0TvV7f சும்மா என்பதற்கு பிக்பாஸ் அர்த்தம் தெரியாமல் கேள்வி எழுப்ப, அதற்கு சிரித்துக்கொண்டே ஸ்ருதிகா விளக்கம் அளித்தார். இப்படி, ஸ்ருதிகாவின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.