ENTERTAINMENT

பிக்பாஸில் எந்தெந்த போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம்.. யாருக்கு அதிகம் தெரியுமா? - முழு விவரம் இதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இந்த நிகழ்ச்சியை முதல் சீசன் தொடங்கி 7வது சீசன் வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமலும் தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். சில காரணங்களினால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக, தற்போது விஜய் சேதுபதி சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என தொடங்கியுள்ள இந்த சீசனில் ஆண்கள் Vs பெண்கள், 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என எல்லாமே அதிரடியாக இருந்தது. அப்படி போட்டி தொடங்கிய 24 மணிநேரத்தில் மகாராஜா புகழ் நடிகை சாச்சனா எலிமினேட் ஆனார். போட்டி, சண்டை என வீட்டுக்குள் தற்போது நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் படி, ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் தான் அதிக சம்பளம், இருவரும் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றனர். அவர்களை தொடர்ந்து தீபக் மற்றும் சாச்சனா இருவருக்கும் ரூ. 30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. சாச்சனா சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தின் மூலம் ரீச் ஆனதால் அவருக்கு இந்த சம்பளம் என்று கூறப்படுகிறது. இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய தோல்வி படம்.. ரூ.120 கோடி நஷ்டத்தால் மொத்தத்தையும் இழந்த தயாரிப்பாளர்..! அவர்களை தொடர்ந்து அருண், அர்னவ், சத்யா, வி.ஜே விஷால், ஜாக்குலின், பவித்ரா ஜனனி, சுனிதா, அன்ஷிதா, தர்ஷா குப்தா, தர்ஷிகா என ஒட்டுமொத்தமாக களமிறங்கியுள்ள சின்னத்திரை பட்டாளத்திற்கு ரூ. 20 ஆயிரம் முதல் 25000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து முத்துக்குமார், ஜெப்ரி, சௌந்தர்யா ஆகியோருக்கு ரூ. 10000 சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.