ENTERTAINMENT

"வேட்டையன் படம் ரிவ்யூ" - கல்வி சுரண்டல பற்றி நல்ல சொல்லி இருகார்... 70 வயது பாட்டி அதிரடி...

வேட்டையன் படம் ரிவ்யூ ஜெய் பீம் வெற்றிக்கு பிறகு ஞானவேல் ரஜினியுடன் சேர்கிறார் என தெரிந்த உடன் ஜெய் பீம் மாதிரியான ரத்தமும் சதையும் கொண்ட அழுத்தமான படத்தை கொடுத்த இயக்குநர் ஒரு மாஸ் ஹீரோவை வைத்து என்ன படம் தர போகிறார் என்பது தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கும் கதை சரண்யா என்ற ஆசிரியையின் பாலியல் கொலைக்கு பின்னால் இருக்கும் காரணத்தை தேடி பயணிக்கிறது. ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் கல்வியை வியாபாரம் ஆக்கி பணம் பார்க்கும் கார்ப்பரேட் வில்லனை தண்டிக்கும் அதே பழைய கதையை தான் ரஜினியை வைத்து கமர்ஷியல் படமாக, இதே தவறு செய்தவன் எம்.எல்.ஏ எம்.பி என்றால் போலீஸ் என்கவுண்டர் செய்யுமா என அங்காங்கே தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க ரஜினி நடிப்பு மட்டுமே தெரிந்தாலும், அதையும் தாண்டி தொழில்நுட்ப திருடனாக வரும் பஹத் பாசில் தனியாக தெரிகிறார்.ரித்திகா சிங், ரக்சன், மஞ்சு வாரியர் போன்ற மற்றவர்களுக்கு கெஸ்ட் ரோல் தான். இதில் மஞ்சு வாரியர் மட்டும் ஒரு சீனில் மாஸ் காட்டி தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நீதிபதி அமிதாப் பச்சன் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சத்தமில்லாமல் நடித்து ரஜினி செய்த தவறை சொல்கிறார். இரண்டாம் பாதியில் வரும் ரானா வழக்கமான கார்ப்பரேட் வில்லனாகவே தெரிகிறார்.அதே போல் அனிருத் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் நினைவில் நிற்கும் படி உள்ளது. மற்றபடி அதே ஜெயிலர் பிஜிஎம் வாசனை இங்கும் அடிக்கிறது. இதையும் வாசிக்க: ஆயுத பூஜை 2024: இப்படி வழிபாடு செய்யுங்க… தொழிலில் லாபம் கொட்டும்… படத்திற்கு ஒரே பலம் ரஜினி தான். மொத்த படத்தையும் தன் தோளில் தூக்கி சுமந்து செல்கிறார். மற்றொரு பலமாக பகத் பாசில், சீரியசான நேரங்களில் கேசுவலாக ஹார்லிக்ஸ் சாப்பிடுவது போன்ற துரு துரு நடிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார். நுழைவு தேர்வை வைத்து நடக்கும் வியாபாரம், குற்ற செயல்களில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை சிக்க வைப்பது இது போன்ற சில காட்சிபடுத்தல் மூலம் இயக்குநர் வெறும் கமர்ஷியல் படம் என்றில்லாமல் சில விஷயங்களை சொல்ல முயற்சி செய்கிறார். ஆரம்பத்தில் இருந்து படம் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை கணிக்கும் வகையில் தான் உள்ளது. ஆனாலும் படம் வேகமாக பயணிப்பது படத்திற்கு பலம். விருதுநகரில் காலை 11 மணிக்கு படம் திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் பழமை மாறாமல் விண்டேஜ் ஸ்டைலில் தோரணம் கட்டி, வாழை மரம் கட்டி படத்தை கொண்டாடினர்.இது அவர்கள் இன்றும் ரஜினி மீது வைத்துள்ள அன்பை காட்டுகிறது. படம் பற்றி கருத்து தெரிவித்த ரசிகர்கள் பெரும்பாலும், ரஜினி நீண்ட நாட்களுக்கு பின்னர் இது போன்ற சமூக கருத்துள்ள படம் நடித்திருப்பது நன்றாக உள்ளது என்றனர். மொத்தத்தில் பழைய கதை தான் எனினும், தொய்வில்லாமல் வேட்டையன் உள்ளது. வரும் விடுமுறை நாட்களில் வேட்டையன் வசூல் வேட்டை செய்வார் என எதிர்பார்க்கலாம். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.