ENTERTAINMENT

Vettaiyan Review: குறி வைச்சார்... இரை விழுந்தது... படம் பார்த்து ரசிகர்கள் குதுகலம்...

வேட்டையன் திரைப்பட விமர்சனம் ஜெயிலர் படம் வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது. ஜெய் பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியிலுள்ள ராம் முத்துராம் திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்குத் திரையிடப்பட்டது. முன்னதாக ரசிகர்கள் கேக் வெட்டி, கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து பட ரிலீஸை கொண்டாடினர். படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் திரைப்படம் குறித்துக் கூறுகையில், ஜெய் பீம் படத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசிய இயக்குநர் ஞானவேல் இப்படத்தில் மீண்டும் சமூக நீதி பற்றி பேசி உள்ளார். இதையும் படிங்க: 47 ஆண்டு கழித்து நடந்திருக்கு… வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்… இந்த படத்தின் டிரைலரை பார்த்து என்கவுண்டருக்குப் படம் ஆதரவு என பலர் நினைத்தனர். ஆனால் என்கவுண்டருக்கு எதிரான கருத்தை இந்த படம் பேசி இருக்கிறது. என்கவுண்டரில் ஏழைகள் மட்டுமே ஏன் கொல்லப்படுகின்றனர் போன்ற வசனங்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கல்வித்துறையில் நடக்கும் ஊழல் பற்றி இந்த படம் பேசியுள்ளது. நீட் தேர்வு குறித்த கருத்துகளும் படத்தில் பேசப்பட்டுள்ளது. படம் பார்த்து பலரும் படம் நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் படமாக அமையும். ரஜினி மேலும் நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். அனிருத் அருமையாக இசையமைத்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அனைவருக்கும் சமமாக இயக்குநர் கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / திரை விமர்சனம் / Vettaiyan Review: குறி வைச்சார்... இரை விழுந்தது... படம் பார்த்து ரசிகர்கள் குதுகலம்... Vettaiyan Review: குறி வைச்சார்... இரை விழுந்தது... படம் பார்த்து ரசிகர்கள் குதுகலம்... வேட்டையன் திரைப்பட விமர்சனம் திருநெல்வேலியில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tirunelveli,Tamil Nadu Last Updated : October 10, 2024, 3:37 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : S Santhanakumar தொடர்புடைய செய்திகள் ஜெயிலர் படம் வெற்றியை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியானது. ஜெய் பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியிலுள்ள ராம் முத்துராம் திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்குத் திரையிடப்பட்டது. முன்னதாக ரசிகர்கள் கேக் வெட்டி, கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து பட ரிலீஸை கொண்டாடினர். விளம்பரம் படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் திரைப்படம் குறித்துக் கூறுகையில், ஜெய் பீம் படத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசிய இயக்குநர் ஞானவேல் இப்படத்தில் மீண்டும் சமூக நீதி பற்றி பேசி உள்ளார். இதையும் படிங்க: 47 ஆண்டு கழித்து நடந்திருக்கு… வேட்டையன் பட ரிலீஸை கொண்டாடிய குமரி ரசிகர்கள்… இந்த படத்தின் டிரைலரை பார்த்து என்கவுண்டருக்குப் படம் ஆதரவு என பலர் நினைத்தனர். ஆனால் என்கவுண்டருக்கு எதிரான கருத்தை இந்த படம் பேசி இருக்கிறது. என்கவுண்டரில் ஏழைகள் மட்டுமே ஏன் கொல்லப்படுகின்றனர் போன்ற வசனங்கள் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கல்வித்துறையில் நடக்கும் ஊழல் பற்றி இந்த படம் பேசியுள்ளது. நீட் தேர்வு குறித்த கருத்துகளும் படத்தில் பேசப்பட்டுள்ளது. படம் பார்த்து பலரும் படம் நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். விளம்பரம் படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் படமாக அமையும். ரஜினி மேலும் நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். அனிருத் அருமையாக இசையமைத்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அனைவருக்கும் சமமாக இயக்குநர் கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , movie review , Rajinikanth , Vettaiyan First Published : October 10, 2024, 3:37 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.