ENTERTAINMENT

ரஜினியின் வேட்டையன் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தாரா விஜய்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ரஜினி - விஜய் ரஜினியின் வேட்டையன் படத்தை விஜய் தியேட்டரில் சென்று பார்த்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இந்த படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. போலீஸ் கேரக்டரில் ரஜினிகாந்த் வழக்கம்போல மாஸ்ஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் பகத் பாசிலுடைய கேரக்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. சிலர் படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருப்பதாகவும், 2 ஆவது பாதி சராசரிக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜேனரில் வெளிவந்துள்ள வேட்டையன் படத்தில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வேட்டையன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களே அதிகம் வந்துள்ளன. வழக்கமான ரஜினி படங்களைப் போல் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், வேட்டையன் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேட்டையன் படத்தை நடிகர் விஜய் தியேட்டருக்கு சென்று பார்த்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த வீடியோவில் மாஸ்க் அணிந்தவாறு விஜய் விறுவிறுவென தியேட்டரில் இருந்து வெளியே வந்து காருக்குள் செல்கிறார். Vijay who saw the film Vedatiyan... Thalapathy came for the leader..! 🔥🔥🔥 #Chennai #ThalapathyVijay #Vijay #Vettaiyan #VettaiyyanMovie #VettaiyanFDFS #VettaiyanReviews #DeviTheatre #Vettayain #Rajinikanth #VettaiyanFDFS #AmitabhBachchan #RanaDaggubati #FahadhFaasil … pic.twitter.com/uHd5KxN832 இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவுடைய உண்மைத் தன்மை உறுதி செய்யப்படவில்லை. இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று பலர் சமூக வலைதளங்களில் கூறியுள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.